மேலும் அறிய
மதுரை: பந்தல்குடி கால்வாயில் கழிவுநீருடன் குடிநீர்.. ஆபத்தை அறியாமல் குடிக்கும் அவலம், மாநகராட்சி நடவடிக்கை தேவை !
உடைந்த குழாயை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாக்கடை பகுதியில் குடிநீர்
Source : whatsapp
மதுரை மாநகர் பந்தல்குடி கால்வாயில் கழிவுநீரோடு கலக்கும் குடிநீர். கால்வாய் அருகே ஆபத்தை உணராமல் குடிநீரை பிடித்து பயன்படுத்தும் அவலம் - மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
குடிநீர் விநியோகம் செய்யும் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.
மதுரையில் உள்ள பந்தல்குடி கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பந்தல்குடி கால்வாய் அருகே அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதன் கால்வாய் குறுக்கே சென்ற குடிநீர் குழாய் வாயிலாக தண்ணீர் தொடர்ச்சியாக வெளியேறியது. குழாயில் இருந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறியதோடு மட்டுமின்றி பந்தல்குடி கால்வாயில் வீணாக கலந்து கழிவுநீராக செல்கிற அவலம் ஏற்பட்டுள்ளது.
குழாயை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதனை அப்பகுதி மக்கள் ஆபத்தை. உணராமல் கடும் துர்நாற்றம் வீசிவரும் நிலையில் குடங்களில் குடிநீரை பிடித்து சேமித்து வைக்கின்றனர். தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடி தண்ணீர் கழிவு நீரில் கலந்து வீணாவது அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















