Madras Eye: சென்னையில் அதிவேகமாக பரவும் மெட்ராஸ் ஐ பாதிப்பு.. தடுப்பது எப்படி..? மருத்துவர்கள் விளக்கம்..
மெட்ராஸ் ஐ பரவுவதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் உதவி பேராசிரியர் டாக்டர் சர்மிளா தேவி மற்றும் பேராசிரியர் டாக்டர்.பாலாஜி கோபிநாத் ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்.
மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படும் கண் வெண்படல அழற்சி நோய் (Conjunctivitis) முதல் முறையாக சென்னையில் கண்டறியப்பட்டதால் , இந்த நோய்க்கு மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படுகிறது.
மேலும், மெட்ராஸ் ஐ பரவுவதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் உதவி பேராசிரியர் டாக்டர் சர்மிளா தேவி மற்றும் பேராசிரியர் டாக்டர்.பாலாஜி கோபிநாத் ஆகியோர் விளக்கமளித்துள்ளனர். அவை பின்வருமாறு..
1. டாக்டர் சர்மிளா தேவி ( உதவி பேராசிரியர். சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை )
கண்நோய் வந்த ஒருவரைப் பார்த்தாலே மற்றவர்களுக்கு வந்து விடும் என்று சொல்ல முடியாது. கண்கள் சிவத்தல், நீர் வடிதல், கண்களில் எரிச்சல், கண்ணிலிருந்து அழுக்கு வெளியேறி இமைப்பகுதியில் ஒட்டிக் கொள்ளுதல் போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாக உள்ளன.
மெட்ராஸ் ஐ பரவலைத் தடுக்கும் வழிமுறைகள்:
- பாதிக்கப்பட்டவர் கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்யவேண்டும் தொற்றால் , பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய காகிதம் மற்றும் கைக்குட்டையை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது.
- நோய் பாதித்தவர்கள் சரியாகும் வரை பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது. குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகித் தனியாகப் படுத்துக்கொள்ள வேண்டும்.
- மெட்ராஸ் ஐ பாதித்த குழந்தைகள், பெரியவர்கள் செல்போன் அதிகம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- பழைய கான்டாக்ட் லென்ஸ்களை தவிர்த்துவிட்டு மருத்துவரின் அறிவுரை பெற்ற பின்னர் புதியதை பயன்படுத்த வேண்டும்.
- தாங்களாகவே மருந்துக்கடையில் சென்று மருந்து வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சுயமாக மருத்துவம் செய்ய வேண்டாம், மருத்துவரின் ஆலோசனைப்படிதான் சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும்.
- கண்ணுக்கு யார் மருந்து போடுகிறார்களோ அவர்கள் மருந்து போடும் முன், மருந்து போட்ட பின் கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.
- நல்ல ஆரோக்கியமான, நீர்ச்சத்து மிகுந்த, வைட்டமின் ஏ மற்றும் சி சத்துள்ள உணவு, உறக்கம், கண்ணுக்கு ஓய்வு போன்றவை நோய்ப் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய வைக்கும்.
- நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், கருப்பு கண்ணாடி அணிந்துகொள்வது நல்லது.
2. டாக்டர் பாலாஜி கோபிநாத் ( பேராசிரியர். சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை )
திரையரங்குகளுக்கு செல்லக் கூடாது:
- மெட்ராஸ் ஐ -யால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும்
- சினிமா தியேட்டர்கள் போன்ற இடங்களுக்கு செல்லக்கூடாது.
- லேப்டாப் , மொபைல் பயன்படுத்துவதை தவிர்த்து கண்களுக்கு ஓய்வு கொடுத்து வீட்டிலேயே இருக்க வேண்டும்.
- கண்களுக்கு ஔிபடக்கூடிய எந்த விசயமும் செய்யக் கூடாது.
- 2 நாட்கள் ஓய்வு எடுத்தாலே சொட்டு மருந்துகள் மூலம் சுலபமாக சரி செய்யலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )