Dinner Rituals : சாப்பிட்ட உடனே தூங்க ரெடியாகிடுறீங்களா? உஷார் மக்களே.. இதை கவனிங்க..
உடனடியாகத் தூங்கும் பழக்கம் உங்களை, பல கடுமையான நோய்களுக்கு ஆளாக்கிவிடும்.
இரவில் தாமதமாக சாப்பிடுவது, கனமான உணவுகளை உட்கொள்வது மற்றும் சாப்பிட்ட உடனேயே தூங்குவது இவையெல்லாம் உடம்புக்குப் ஒத்துக்கொள்ளாதவை. நீங்கள் உணவு உண்ட உடனேயே உறங்கப் பழகினால், உங்கள் பல நோய்களுக்கு இதுவே காரணம். இரவில் மட்டுமல்ல, பகலில் சாப்பிட்டுவிட்டு தூங்கும் பழக்கம் இருந்தால், இந்தப் பழக்கத்தை உடனடியாக மாற்றிக் கொள்ளுங்கள்.
ஏனெனில் உங்களின் இந்த பழக்கம் உங்களை பல கடுமையான நோய்களுக்கு ஆளாக்கிவிடும். தேர்ந்தெடுத்த உணவை உண்பது போலவே சரியான உணவு முறையும் முக்கியம். ஏனென்றால், நீங்கள் சரியான உணவை எடுத்துக் கொண்டாலும், உணவை உண்ணும் நேரமோ அல்லது உண்ட பிறகும் உடல்நிலை சரியில்லாவிட்டால் அந்த உணவு உங்களுக்கு நல்லதை விட தீமையே செய்யும். எனவே சாப்பிட்ட உடனேயே தூங்கப் பழகிவிட்டீர்கள் என்றால், என்னென்ன நோய்கள் உங்களை பாதிக்கச் செய்யும் என்பதைத் தெரிந்து கொள்வோம்..
நீரிழிவு நோய்
உணவு உண்டவுடன் உடலில் சர்க்கரையின் அளவு அதாவது குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், சாப்பிட்டுவிட்டு தூங்கும் பழக்கம் இருந்தால், உடலில் சர்க்கரை பயன்படுத்தப்படாமல், ரத்தத்தில் அதிக சர்க்கரை கரைய ஆரம்பிக்கும். எப்போதும் இத்தகைய பழக்கவழக்கங்களால், நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது.
தூக்கம் கெடுகிறது
உணவு உண்டவுடன் உறக்கம் உடனே வரும். ஆனால் இரவில் தூக்கம் கலைய ஆரம்பிக்கும். இதை உங்கள் அன்றாடப் பழக்க வழக்கமாக்கிக் கொண்டால், அது தூக்கத்தை தொந்தரவு செய்யத் தொடங்குகிறது. ஏனெனில், உணவு வயிற்றில் தேங்கி, செரிமானம் மெதுவாகிறது. வளர்சிதை மாற்றமும் பலவீனமாகிறது.
செரிமான பிரச்சனை
சாப்பிட்ட உடனேயே தூங்கினால், உணவு சரியாக ஜீரணமாகாது. இதற்குக் காரணம், நீங்கள் தூங்கிய பிறகு, பெரும்பாலான உடல் உறுப்புகள் அசையாமல் வேலை செய்வதை நிறுத்திவிடும். அத்தகைய சூழ்நிலையில், தூக்கத்தின்போது செரிமான செயல்முறை தடைபடுகிறது, இதன் காரணமாக உணவை ஜீரணிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. உணவு சாப்பிட்டு உறங்குபவர்கள், எழுந்த பிறகும் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதற்கு இதுவே காரணம்
அசிடிட்டி
இதுதவிர சாப்பிடாமல் இருந்தால்தான் அசிடிட்டி போன்ற பிரச்னைகள் வரும் எனப் படித்திருப்போம். உண்மையில் சாப்பிட்டவுடன் தூங்கச் சென்றாலும் அசிடிட்டி உண்டாகும். உணவு உண்டவுடன் செரிமானம் அடைய வயிற்றில் சில ஆசிட்கள் சுரக்கின்றன. செரிமானத்துக்காக வெளியேற்றப்படும் இந்த ஆசிட்கள் நாம் விரைந்து தூங்கச்செல்லும்போது மற்ற எந்த பகுதியும் செயல்படாமல் போகவே உணவுக்குழாயின் மேலேறி இதனால் ஒருவித அழற்சியை உடலில் ஏற்படுத்துகிறது... இனி சாப்பிட்டு சற்று இளைப்பாறிவிட்டுத் தூங்கச் செல்வது நலம்..
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )