20- 30 வயதிற்குட்பட்டவரா நீங்கள்? இளைஞர்களுக்கு அதிகரிக்கும் மாரடைப்பு: தவிர்ப்பது எப்படி?
உயர் படிப்பைத் தொடர்கிற மற்றும் வேலை பார்க்கிற இளைஞர்கள் பலரும் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
நீங்கள் முப்பது வயதுக்குட்பட்டவராக இருந்தால், நான் 20-30 வயதிற்குள்ளாக தான் இருக்கிறேன். உடல்நலன் குறித்து யோசிக்க என்ன அவசரம்? அது பற்றியெல்லாம் யோசிக்க இன்னும் பல காலம் இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். அது தவறான அணுகுமுறை. இதயத்தின் நலன் குறித்து இப்போதிருந்தே நீங்கள் யோசிக்கத் தொடங்க வேண்டும். அதற்கான முக்கிய காரணம், இளவயதினரிடம் குறிப்பாக பெண்களிடம் மாரடைப்பு அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 20 முதல் 30 வயதில் உங்கள் இதய ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது உங்கள் இதயத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல், அது நீண்ட காலத்திற்கு சீராக இயங்குவதற்கும் உதவுகிறது.
உயர் படிப்பைத் தொடர்கிற மற்றும் வேலை பார்க்கிற இளைஞர்கள் பலரும் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மன உளைச்சல் ஆரோக்கியமற்ற மற்றும் ஒழுங்கற்ற உணவுப் பழக்கத்திற்கு வழிவகுக்கிறது. நீண்ட நேரம் அமர்ந்தபடியே வேலை செய்வது, போதிய உடற்பயிற்சி செய்யாதது ஒழுங்கற்ற தூக்கமுறை போன்றவை உடல்நலத்தை பாதிக்கிறது. இவையெல்லாம் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
மன அழுத்தம்:
இளவயதில் மன அழுத்தன் என்பது தவிர்க்கமுடியாத ஒன்று. பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அவற்றிற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறோம் என்பதுதான் முக்கியம். மன அழுத்தம் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை உண்டாக்கும். எனவே, உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் நேர்மறையான அணுகுமுறையைக் கொள்ள வேண்டும்.
அதிகப்படியான கொழுப்பு:
ஒழுங்கற்ற மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் உயர் கொழுப்பு அளவுகளை ஏற்படுத்தக்கூடும், இது இதய நோய் மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. உடற்பயிற்சி செய்யாதது, அதிகப்படியான சர்க்கரையை எடுத்துக் கொள்ளுதல், போன்றவை இளவயதுகளில் பக்கவாதத்தை ஏற்படுத்தக்கூடும். வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது, நல்ல உணவு வகைகளை எடுத்துக்கொள்வது போன்றவை கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். காய்கறிகள், தானிய வகைகள் மற்றும் இறைச்சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
உயர் இரத்த அழுத்தம்:
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இளம் வயதினருக்கு சாதாரண இரத்த அழுத்தத்தை விட சற்று அதிகமாக இருந்தாலும், அவர்கள் பிற்காலத்தில் இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே வருடத்திற்கு ஒரு முறையாவது உங்கள் இரத்த அழுத்தத்தை அனைவரியும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். பரிசோதனையின்போது இரத்த அழுத்தம் சற்று அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.
புகைப்பிடித்தல்:
படிப்பு மற்றும் வேலை சம்பந்தப்பட்ட அழுத்தம் இருக்கும்போது பல இளைஞர்கள் புகைப்பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். அது நுரையீரல் புற்றுநோய், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஆகியவற்றை ஏற்படுத்துவதோடு மாரடைப்பு ஏற்படவும் வழிவகுக்கிறது என்கின்றன ஆய்வுகள்.
கருத்தடை மாத்திரைகள்:
கருத்தடை மாத்திரைகள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க்கூடும். சில பெண்களுக்கு அது உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தாது என்றாலும், குடும்பத்தில் யாருக்காவது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருப்பின் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவது மாரடைப்புக்கு வழிவகுக்கலாம்.
வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளைத் தவிர்த்தல்:
அவ்வப்போது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை பரிசோதனை செய்வதன் மூலம் பெருமளவில் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
ஆரோக்கியமான இதயத்தை பெற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். சரியான ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது உடற்பயிற்சி செய்வது ஆகியவை தினசரி வாழ்க்கையின் முக்கிய அம்சங்களாக இருக்க வேண்டும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )