உடலில் சிக்கல் இருந்தா 'கண்'ணே காட்டும்! கொழுப்பு பிரச்னை குறித்து தெரிஞ்சுக்கோங்க!
உடலில் அதிக அளவு கொழுப்பு இருந்தால் அது உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம். இதில் ஆபத்து என்னவென்றால் கொழுப்பு இருப்பது பலருக்கும் தெரிவதில்லை.
உடலில் அதிக அளவு கொழுப்பு இருந்தால் அது உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம். இதில் ஆபத்து என்னவென்றால் கொழுப்பு இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. அது ஏதாவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் போதுதான் மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பிக்கின்றனர்.
கொழுப்பு அவசியமானது அதிகமானால் ஆபத்தானது: கொழுப்பை முழுக்க முழுக்க புறக்கணித்துவிடவும் முடியாது. ஏனெனில் உடலில் ஹார்மோன்கள், மெம்பரன்ஸ் மற்றும் வைட்டமின் டி தக்கவைத்தல் உள்ளிட்ட பலவற்றிற்கு கொழுப்பு மிகவும் அவசியமானது. கொழுப்பு நீரில் கரையக்கூடியது அல்ல. அதனால், Lipoproteins இரத்தம் வழியே நீந்தி உடலின் மற்ற உள்ளுருப்புகளுக்கு செல்ல பயன்படுகிறது. இதில் இரண்டு வகை இருக்கிறது. அவை LDL (Low-density Lipoproteins) மற்றும் HDL (high-density Lipoproteins)
குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டின்கள் (Low-density Lipoproteins) - இவைதான் கெட்ட கொழுப்பு. குறைந்த அளவிலான Lipoproteins இதயத்தின் அறைகளான ஆர்டெரிகளில் அடைத்து இதயநோய்க்கு வழிவகுக்கும்.
அதிக அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டின்கள் (high-density Lipoproteins)- என்பது இதயத்தில் கொழுப்பு அடைத்துக் கொள்ளாமல் பாதுகாக்கும் பணியை செய்பவை. அப்படி, உடலில் கெட்ட கொழுப்பு சேர்ந்தாலும், அதை கல்லீரலில் இருந்து நீக்க உதவி புரிகிறது.
கொழுப்பு அதிகரிப்பதன் அறிகுறிகள்:
நம் உடலில் கொழுப்பு அதிகரிப்பதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள் சில இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் கண்களின் மேல் தோன்று சிறு தடிப்புகளும் பார்வையில் ஏற்படும் மாற்றங்களும். பார்வை குறைகிறது என்றால் அது முழுக்க முழுக்க கருவிழி சார்ந்தது என்று நினைத்துவிட வேண்டாம். சில நேரம் அது கொழுப்பால் கூட இருக்கலாம். கார்னியாவைச் சுற்றி சாம்பல், வெள்ளை, மஞ்சள் நிற படிமங்கள் காணப்படலாம். கண்ணின் மேல்புறத்தில் மஞ்சள் நிறத்தில் சிறு தடிப்புகள் உருவாகலாம். இவை தெரிந்தால் நிச்சயமாக கொழுப்பின் ஆரம்ப அறிகுறி என்று கூறுகிறார் ஐகானிக் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் நியூரோ ஆப்தால்மாலஜிஸ்ட் டாக்டர் லப்தி ஷா.
1. சாந்தலாஸ்மா (Xanthelasma)
கண்ணிமைகளில் உருவாகும் இந்த கொழுப்பு கட்டிகள் சாந்தலாஸ்மா (Xanthelasma) என்று அழைக்கப்படுகின்றன. மற்ற பகுதிகளில் உள்ள தோலில் இருக்கும் இந்த கொழுப்பு கட்டிகள் சாந்தோமா (Xanthoma) என்ற மருத்துவ பெயாில் அழைக்கப்படுகின்றன.
இந்த நிலையானது அதிகமாக புகைப்பவர்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உடையவர்களுக்கும் சர்க்கரை வியாதியாளர்களுக்கும் எளிதில் ஏற்பட்டுவிடுகிறது.
ரெட்டினல் வெயின் அக்லூசன் (Retinal Vein Occlusion)
ரெட்டினல் வெயின் அக்லூசன் என்றால் என்னவென்று பார்ப்போம். விழித்திரை (Retina) என்பது நமது கண்ணில் உட்கடைசி உறையாகும். இது மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். விழி வெளிப்படலம், திரவம், லென்ஸ், கூழ்ம திரவம் வழியாக வரும் ஒளியானது இதில் படுகிறது. இந்த ஒளி சில மின்வேதி மாற்றங்களை உண்டு செய்து மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. மூளை இத் தகவல்களை உருவங்களாக மாற்றுகிறது. எல்லாப் பொருட்களின் பிம்பமும் விழித்திரையில் தலை கீழாகத் தான் விழும். மூளை தான் இவற்றை நேராக்குகிறது.
இந்த ரெட்டினாவுக்கு ரெட்டினல் ஆர்ட்டரி வழியாகவும் ரெட்டினல் வெயின் வழியாக ரத்த ஓட்டம் பாய்கிறது. ஆனால் கொழுப்பு சேர்ந்து அது இந்த வெயினில் உடைந்தால் அதுவே ரெட்டினல் வெயின் அக்லூசன் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையின் அறிகுறிகள் என்ன?
1. பார்வையில் மாறுதல் ஏற்படுதல்.
2. ஒரு கண்ணில் மட்டும் பார்வை மங்குதல்.
3. நாம் பார்க்கும் உருவங்களின் மீது கறுப்புக் கோடுகள் இருப்பது போல் தோன்றதுல். பார்வை அலை அலையாய் இருத்தல்.
4. பாதிக்கப்பட்ட கண்ணில் வலி ஏற்படுதல்.
இந்த பாதிப்புகள் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு அதிகமாகக் காணப்படுகிறது. ரத்த சர்க்கரை, குளுக்கோமா, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது அதிகம் ஏற்படுகிறது.
ஆர்கஸ் செனிலிஸ் (Arcus Senilis)
ஆர்கஸ் செனிலிஸ் பாதிப்பு ஏற்பட்டால் கார்னியாவைச் சுற்றி ஒரு வெள்ளை, நீலம் அல்லது பழுப்பு நிற வளையம் உருவாகிறது. இது கார்னியாவில் கொழுப்பு படிந்ததற்கான அறிகுறி. இந்த நிலை நடுத்தர வயது கொண்டோரை அதிகம் தாக்குகிறது.
சிகிச்சை என்ன?
கண்களைச் சுற்றி படியும் கொழுப்பை அறுவை சிகிச்சைகள் மூலம் சரி செய்யலாம். இந்த வளர்ச்சியால் கண் பார்வைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றால் அழகு சார்ந்து இந்த அறுவை சிகிச்சையை பெரும்பாலானோர் செய்து கொள்கின்றனர்.
என்ன மாதிரியான அறுவை சிகிச்சைகள் உள்ளன
* கார்பன் டை ஆக்ஸைடு மற்று ஆர்கன் லேசர் அப்லேஷன்
* சர்ஜிக்கல் எக்ஸிசன்
* கெமிக்கல் காட்டரைசேஷன்
போன்ற அறுவை சிகிச்சைகள் மூலம் சரி செய்யலாம். ஆனால் எல்லாவற்றையும் விட சிறந்தது வரும்முன் காப்பது. கொழுப்பு, சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம் ஆகியன வாழ்வியல் சார்ந்த வியாதிகள் என்பதால் நம் வாழ்க்கை முறையை சிறிது மாற்றி அமைத்தாலே நாம் ஆரோக்கியமாக இருக்கலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )