மேலும் அறிய

அன்பும் அறனும் -4: குட்டித் தொப்பையாய் கர்ப்பகாலம்.. அழகான இரண்டாம் காலாண்டு பருவம்!

குட்டி தொப்பைபோல லேசாக மேடிட்டு வெளித்தெரியத் தொடங்கும் அடிவயிற்றை அவ்வப்போது தொட்டுப்பார்க்கத் தொடங்கும் காலம் இரண்டாம் காலாண்டு (second trimester).

குட்டி தொப்பைபோல லேசாக மேடிட்டு வெளித்தெரியத் தொடங்கும் அடிவயிற்றை அவ்வப்போது தொட்டுப்பார்க்கத் தொடங்கும் காலம் இரண்டாம் காலாண்டு (second trimester).

  • அளவே! அளவே! உடையின் அளவே!

உடைகளின் அளவுகளை மாற்றவேண்டிய நேரம் இது. நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் அளவைவிடவும் சற்று தளர்வாக அடுத்த அளவு உடைக்கு மாறினால் தற்போது சரியாக இருக்கும். அடுத்த அளவுக்கு மாறவேண்டும் என்று நினைக்கும்போதே எனக்கு லேசான பதட்டமும் அச்சமும் வந்துபோனது. "நம்மால் பழைய அளவுக்கு மீண்டும் திரும்பிவிட முடியுமா?" என்றும்  தோன்றியது. கருவிலிருக்கும் குட்டிஉயிரின் இருப்பு இந்த 'அளவு மாற்றத்தை' உள்ளபடியே மகிழ்வாக ஏற்றுக்கொள்ள வைத்தது. உடைகளைத் தெரிவுசெய்யும்போது  பெரும்பாலும் பருத்தி வகையிலான மெல்லிய துணிவகைகளை அணியலாம். ஜம்க்கி, கண்ணாடி வேலைப்பாடுகள் வயிற்றுப்பகுதியை உறுத்தாத வகையில் பார்த்துக்கொள்ளுங்கள்.

  • உங்கள் காலணி எந்த வகை?

நம்மில் பலரும் சிறிதளவு heel வைத்த செருப்பை அணியும் வழக்கத்தைக் கொண்டிருப்போம். பிரசவிக்கும் காலம்வரை flats எனப்படும் சமமான தட்டையான செருப்புகளை அணிவது நல்லது. இனிவரும் மாதங்களில் லேசான கால்வீக்கம் இருக்கலாம் என்பதால் வழக்கமான அளவிலிருந்து அடுத்த அளவில் செருப்புகளைப் பயன்படுத்தலாம். பாதங்கள் வலிக்காமல் இருக்குமாறு கிடைக்கிற  orthopedic slippers வகையையே நான் பயன்படுத்தினேன். Shoes, sandals போன்றவற்றைவிட slippers இதமாக இருந்தது.

அன்பும் அறனும் -4: குட்டித் தொப்பையாய் கர்ப்பகாலம்.. அழகான இரண்டாம் காலாண்டு பருவம்!

  • கண்களை முட்டும் கண்ணீர்!

ஒன்றுமே இல்லாத விஷயத்துக்கெல்லாம் சட்டென அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

 "காரணம் தேடித்தேடி கவலைபடத் தொடங்கிவிட்டோமோ?" , "இது நம்ம டிசைனே இல்லையே" என யோசிக்கும்போது இவை அனைத்துமே pregnancy moodswingsதான் என்று சகதோழிகள் சொன்னவை நினைவுக்குவர moodswings பற்றிய உளவியல் தகவல்களை தேடிப் படித்தேன். காரணமில்லா அழுகை, கவலை எல்லாம் உடல்சார்ந்த ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் தற்காலிக உணர்வெழுச்சி மாற்றங்களே தவிர நமக்கொன்றும் பிரச்சனை இல்லை என்கிற தெளிவு மனதை இலகுவாக்கியது.

"டிப்ரஷனா இருக்கு" என்று சொல்லிக்கொண்டிருந்த  நாளொன்றில் உளவியல் மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்

 எழுதிய 'மனச்சோர்வு- கற்பிதங்களும் உண்மைகளும்' புத்தகத்தை வாசித்தேன். பேறுகாலமும் மனச்சோர்வும் எனும் கட்டுரை பெரிதும் உதவியது. வாய்ப்பிருப்பின் நீங்களும் வாசித்துப் பாருங்கள்.

குழந்தையைப் பார்த்தீர்களா?!

Anamoly scan எனப்படுகிற ஸ்கேனில் குழந்தையின் தலை, மூளை, இதயத்துடிப்பு, முகுதுத்தண்டு, கை, கால்கள், மூக்கு எலும்பு போன்றவற்றின் வளர்ச்சியை உறுதிப்படுத்த எடுக்கிறார்கள்.  வழக்கமான ஸ்கேனைவிடவும் அந்த ஸ்கேன் செய்ய நேரம் கொஞ்சம் அதிகம் ஆகும். குழந்தையின் வளர்ச்சியை முழுமையாகப் பார்க்க முடிகிற அந்த ஸ்கேனுக்கு ஆவலோடு தயாராக இருங்கள்.

  • பையில் இருக்கட்டும் பணம்

மாதாந்திர பரிசோதனையில் இந்த மாதம் ஸ்கேன் உண்டு என்று முன்கூட்டியே தெரிந்தால், கூடுதலாக பணம் எடுத்துச் செல்லுங்கள். கையில் டெபிட் கார்டு உள்ளதே என்று கார்டோடு சென்று, மருத்துவமனையின் ஸ்வைப் மெஷின் அன்றுபார்த்து வேலை செய்யவில்லை என்றாலோ, நமது வங்கியின் சர்வரில் பிழை என்றாலோ அதன்பிறகு ஏ.டி.எம் மையத்தைத் தேடி ஓட வேண்டியிருக்கும். மருத்துவமனையில் கூடுதல் காத்திருப்பைத் தவிர்க்கலாம்.

  • பேசாத பேச்செல்லாம்!

கருவில் இருக்கும் குட்டிஉயிரோடு பேசத் தொடங்கிவிட்டீர்களா? இல்லை எனில் இன்றிலிருந்தே தொடங்குங்கள். வயிற்றின்மீது கைவைத்து வாஞ்சையோடு பேசுங்கள்.  நம் குட்டிஉயிருக்கு மிகப்பிடித்த குரல் நம்முடைய குரல்தானே. அதனால் நேரமிருக்கும்போதெல்லாம் குழந்தையோடு பேசுங்கள். எனக்கு  காபி குடிக்கும்போது மசக்கை காரணமாக அப்படியே வெளிவந்துவிடும். அதனால் தேநீருக்கு மாறியிருந்தேன். ஒரு முயற்சியாக

ஒருநாள் குழந்தையோடு பேசிக்கொண்டே காபி போட  நினைத்தேன். கதைபோல காபி போடுவதைப்பற்றி சொல்லிக்கொண்டே போட்டு குடித்து முடித்தேன். அந்த உரையாடல் மனதளவில் மிக மகிழ்ச்சியாக உணரவைத்தது. நீங்களும் பேசுங்கள்! மகிழ்ச்சியை உணருங்கள்!

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget