Diet Coke: புற்றுநோயை உண்டாக்கும் டயட் கோக்.. என்ன சொல்கிறார்கள்? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் அஸ்பர்டேம் எனப்படும் செயற்கை இனிப்பு சுவையூட்டி புற்றுநோயை உண்டாக்கும் என அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் அஸ்பர்டேம் எனப்படும் செயற்கை இனிப்பு சுவையூட்டி புற்றுநோயை உண்டாக்கும் என அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மாறி வரும் உணவு முறைகள் உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. செயற்கை இனிப்பூட்டி, நிறமூட்டி என பார்த்தவுடன் கவரும் வகையில் உணவு முறை மாறிவிட்டது. குறிப்பாக எந்த உணவு சாப்பிட்டாலும் அதன் இறுதியில் குளிர்பானங்கள் இல்லாமல் இருப்பது பலருக்கும் திருப்தியாக அமையாது. இதை எதற்கு குடிக்கிறோம் என்பதே பலருக்கும் தெரியாது.
கோகோ கோலா, பெப்சி, செவன் அப், மிரண்டா போன்ற குளிர்பானங்களை குடித்தால் தான் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு என பலரும் தவறாக நினைத்து டயட் கோக் பக்கம் பலரும் திரும்பியுள்ளனர். ஆனால் இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல தசாப்தங்களாக டயட் கோக்கு முதல் சூயிங்கம் வரை செயற்கை இனிப்புகளில் ஒன்றாக பயன்படுத்தப்படும் அஸ்பார்டேம் அமெரிக்காவில் புதிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் 1981 ஆம் ஆண்டு அஸ்பார்டேமை மனிதர்களின் பயன்பாட்டிற்காக அங்கீகரித்தது. அதன்பின்னர் இதுவரை 5 முறை அஸ்பார்டேம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அஸ்பார்டேமில் கலோரிகள் இல்லை என்றாலும் ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரையை விட 200 மடங்கு இனிப்பை கொண்டுள்ளது. இதனிடையே உலகம் முழுவதும் செயற்கை இனிப்புகளின் பயன்பாடு அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியதால் இந்த ஆய்வை நடத்திவரும் உலக சுகாதார அமைப்பின் அனைத்துலகப் புற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவு, ஜூலை மாதம் இதன் முடிவை வெளியிடும் என கூறப்படுகிறது. இதில், ‘அஸ்பர்டேம் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள்’ அடங்கிய பட்டியலில் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது.
பிரான்ஸில் இந்த ஆய்வானது சுமார் 1 லட்சம் பேரிடம் மேற்கொள்ளப்பட்டது. இதில் அதிக அளவு செயற்கை இனிப்புகளை உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் அபாயம் மற்றவர்களை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. அதேசமயம் இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இத்தகைய செயற்கை இனிப்புகளில் அனுமதிக்கப்பட்ட அளவைப் பரிந்துரைத்துள்ளது. மேலும் அஸ்பார்டேம் கொண்ட தயாரிப்புகளில் இனிப்பானின் பெயரை தெளிவாக குறிப்பிட வேண்டும் என்பது விதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )