Migraine : ஒற்றைத் தலைவலிக்கு யோகா!: நிபுணர்கள் பரிந்துரைப்பது என்ன?
ஒற்றைத் தலைவலியை 'வெறும் தலைவலி' என்று கருத முனைகிறார்கள், இது சரியான கவனிப்பு எடுக்கப்படாவிட்டால், நீண்ட காலத்திற்கு இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்
![Migraine : ஒற்றைத் தலைவலிக்கு யோகா!: நிபுணர்கள் பரிந்துரைப்பது என்ன? Dealing with migraine? Try these five yoga asanas to manage headache and nausea Migraine : ஒற்றைத் தலைவலிக்கு யோகா!: நிபுணர்கள் பரிந்துரைப்பது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/12/192382140a9662dc0a55b6242af946641662990657835498_5.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஒற்றைத் தலைவலி என்பது தற்காலத்தில் பலருக்கு ஏற்படும் பாதிப்பாகக் கருதப்படுகிறது. இதில் ஒரு நபருக்கு குமட்டலுடன் கடுமையான தலைவலி தாக்குதல்கள் அடிக்கடி இருக்கும். "உலக அளவில் தலைவலி பாதிப்புகள் அதிகம் இருந்தாலும் அதற்காக மருத்துவர்களிடம் செல்பவர்கள் மிகக்குறைவே.மருத்துவர்களிடம் செல்லாமலேயே அதனை சமாளித்துவிட முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள். மக்கள் ஒற்றைத் தலைவலியை 'வெறும் தலைவலி' என்று கருத முனைகிறார்கள், இது சரியான கவனிப்பு எடுக்கப்படாவிட்டால், நீண்ட காலத்திற்கு இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒற்றைத் தலைவலியின் கிளாசிக்கல் அறிகுறிகளை மக்கள் புறக்கணித்தால், அவர்கள் நீண்டகால ஒற்றைத் தலைவலிக்கு ஆளாக நேரிடும், ”என்று 2017 ஆம் ஆண்டில் இந்திய அகாடமி நரம்பியல் தலைவராக இருந்த எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் எமரிட்டஸ் பேராசிரியரான டாக்டர் ஏவி சீனிவாசன், பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
மருந்துகள் ஓரளவிற்கு உதவக்கூடும் என்றாலும், யோகா வல்லுநர்கள் யோகா வழியாக இதற்கான நிவாரணம் பெற மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு சிகிச்சையளிப்பதற்கான மூல காரணத்தை சமாளிக்க பரிந்துரைக்கின்றனர். எனவே, நிபுணர் ஒருவர், ஒற்றைத் தலைவலி தாக்குதல்களின் தீவிரத்தை நிர்வகிக்கவும் குறைக்கவும் சில எளிய ஆசனங்களைப் பயிற்சி செய்யலாம் என்று பரிந்துரைக்கிறார்.
View this post on Instagram
இந்த யோகாசனங்களைச் செய்வதற்கான படிப்படியான செயல்முறைகள் இங்கே
*வஜ்ராசனத்தில் உள்ளங்கைகளை தொடைகளில் ஊன்றி அமரவும். கண்களை மூடிக்கொண்டு உடல் முழுவதும் தளர்த்தி ஓய்வெடுக்கவும்.
*மூச்சை உள்ளிழுத்து கைகளை தலைக்கு மேல் உயர்த்தவும். முழங்கைகள் நேராக இருக்க வேண்டும்.
*மூச்சை வெளிவிட்டு, உடற்பகுதியை மெதுவாக முன்னோக்கி நகர்த்தவும். முதுகெலும்பில் இருந்து இல்லாமல் இடுப்பு பகுதியில் இருந்து வளைக்கவும்.
*கைகளை சற்று வளைத்து வைத்து, கைகள், நெற்றி, முழங்கைகளை விரிப்பில் வைக்கவும். கைகள் முழங்கால்களுக்கு முன்னால் இருக்க வேண்டும்.
* இந்த நிலை உங்களுக்கு வசதியாக இருக்கும் வரை இதே நிலையில் சற்று இருங்கள்.
*அடிப்படை நிலைக்குத் திரும்ப, மூச்சை வெளிவிட்டு மெதுவாக தலையையும், கைகளையும் செங்குத்தாக உயர்த்தவும்.
*தொடைகளில் உள்ளங்கைகளை ஊன்றிக் கைகளைத் தாழ்த்தவும்.
*நிதானமாக ஆழ்ந்து சுவாசிக்கவும்.
முயல் போன்ற அமரும் இந்த ஆசனம் உங்கள் தலைவலியைக் கட்டுப்படுத்துகிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)