கோமியம் குடித்தால் ஜூரம் போகுமா? - இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் என்ன சொல்லுது தெரியுமா?
கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும். அஜீரண கோளாறு சரியாகும்

மனிதர்கள் குடிப்பதற்கு கோமியம் பாதுகாப்பனது அல்ல என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் மருத்துவத்துறை பல்வேறு பிரிவுகளில் கண்டுபிடிப்புகளில் சாதனை படைத்து வரும் அதே வேளையில் மாட்டின் சிறுநீரான கோமியத்தை குடிப்பது குறித்து பல்வேறு சர்ச்சை போய்க்கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் சிலர் கோமியம் குடிக்கலாம் என்ற கூற்றை அடிக்கடி கூறி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில், சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி, மாட்டின் கோமியத்தை குடிப்பதன் மூலம் உடலில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் பாக்டீரியா, பூஞ்சைகளை அழிக்கும் சக்தி உள்ளது எனத் தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மேலும், “கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும். அஜீரண கோளாறு சரியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
மாட்டு பொங்கல் அன்று சென்னை மேற்கு மாம்பலத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய அவர், “ஒருமுறை சந்நியாசி ஒருவர் வந்தபோது அவருக்கு நல்ல ஜுரம் அடித்துள்ளது. அப்போது எனது தந்தை ஜுரம் அடிப்பதால் மருத்துவரிடம் செல்லலாமா என கேட்டுள்ளார். அப்போது அவர் கோ மூத்திரம் கேட்டுள்ளார். அதை குடித்ததும் 15 நிமிடத்தில் ஜுரம் குணமாகியுள்ளது. காய்ச்சல், வயிறு தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு சிறந்த மருத்த்ஹாக கோமியம் உள்ளது.
கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும். அஜீரண கோளாறு சரியாகும்” என்று பேசியுள்ளார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஒரு முக்கிய எச்சரிக்கையை ஏற்கெனவே விடுத்துள்ளது. அதன்படி பசுக்கள், எருமைகளின் சிறுநீர் மாதிரிகளை இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. ஆய்வில் தீங்கு விளைவிக்கக் கூடிய 14 வகையான பாக்டீரியாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனால் மனிதர்கள் குடிப்பதற்கு கோமியம் பாதுகாப்பானது அல்ல எனவும் கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது எனவும் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

