டெல்டா, டெல்டா பிளஸ் கொரோனா வேரியண்ட் என்றால் என்ன?
தற்போது, ஒப்புதல் அளிக்கப்பட்ட அநேக தடுப்பு மருந்துகளும் இந்த ஸ்பைக் புரதத்தை தங்கள் இலக்காக வைத்திருக்கின்றன. ஆனால், சார்ஸ்- கோவ்- 19 தனது ஸ்பைக் புரதத்தில் K417N, T478K, P681R and L452R போன்ற மாறுபாடுகளுடன புதிதாக உருவாகி வருகிறது.
கொரோனா வைரஸ்கள் என்பது வைரஸ்களின் ஒரு பெரிய குடும்பமாகும். இது சாதாரண சளியில் இருந்து மிகவும் கடுமையான நோய் தொற்றுகளான மூச்சுக்குழல் அழற்சி, நிமோனியா அல்லது கடுமையான சுவாச நோய்க்குறி(SARS) போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது. 2019-ஆம் ஆண்டு சீனாவில் உள்ள வுஹான் பிராந்தியத்தில் தோன்றிய புதிய கொரோனா வைரஸ் (சார்ஸ்-கோவ் 19) கோவிட் - 19 சுவாச தொற்றுநோய்களை ஏற்படுத்துகிறது.இதனை, நாம் கொரோனா பெருந்தொற்று என்றழைக்கிறோம் (Covid-19 Pandemic).
புதிதாக உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம், மத்திய சுகதாரா அமைச்சகம், இங்கிலாந்து நாட்டின் பொது சுகாதார நிறுவனம் மற்றும் உலகளவில் மேற்கொள்ளப்பட்ட தொற்றுநோயியல் ஆய்வுகள் முன்வைத்த சில கருத்துக்களை இங்கே காணலாம்.
உருமாறிய கொரோனா வைரஸ் என்றால் என்ன?
காலப்போக்கில், சார்ஸ் கோவ் - 19 மரபணு அமைப்புகளில் ஏற்பட்ட மாற்றங்களால் வைரஸில் இருந்து உருமாறிய கொரோனா வகை தோன்றுகிறது. சார்ஸ்- கோவ் 19 என்பது ஆர்என்ஏ மரபியல் பொருட்களை கொண்டது. பொதுவாக, இவற்றின் மரபியல் பொருள் விரைவாகவும் அதிகமாகவும் மாற்றம் அடைந்துக் கொண்டேயிருக்கும். உண்மையில், ஆர்என்ஏ மரபியல் வைரஸ்களை வகைப்படுவதுத்துவது கூடி மிகவும் கடினமாகும்.
இதுவரை எத்தனை மாறுபாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளது?
பலதரப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் வகைகள் தற்போது சுற்றிக்கொண்டிருக்கின்றன.
இவற்றில், இங்கிலாந்தில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வகை( B.1.1.7-Alpha), தென் ஆப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட வைரஸ் வகை (B.1.351- Beta), பிரேசிலில் முதன்முறையாக கண்டறிப்பட்ட கொரோனா வைரஸ் (P.1- gamma), இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட (B.1.617.2- டெல்டா வகை) ஆகிய நான்கு மாறுபட்ட வைரஸ்கள் மிகவும் கவலையளிக்கக் கூடியதாக (Variation Of Concern) வகைப்படுத்தப்பட்டுள்ளது.
WHO label |
Pango lineage |
GISAID clade/lineage | Nextstrain clade |
Earliest documented samples |
Date of designation |
---|---|---|---|---|---|
Alpha |
B.1.1.7 |
GRY (formerly GR/501Y.V1) |
20I (V1) |
United Kingdom, |
18-Dec-2020 |
Beta | B.1.351 | GH/501Y.V2 | 20H (V2) | South Africa, May-2020 |
18-Dec-2020 |
Gamma | P.1 | GR/501Y.V3 | 20J (V3) | Brazil, Nov-2020 |
11-Jan-2021 |
Delta | B.1.617.2 | G/478K.V1 | 21A | India, Oct-2020 |
VOI: 4-Apr-2021 VOC: 11-May-2021 |
டெல்டா வகை கொரோனா வைரஸ்:
புதிய டெல்டா வைரஸ் வகைகள் அதிகம் பரவக் கூடியதாகவும், நுரையீரலை பாதிக்கக் கூடியதாக இருக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தில் உள்ள T478K, P681R and L452R மாற்றங்கள் டெல்டா வகையாகும். இந்த மாற்றம் வைரசை மனிதர்களிடையே அதிகமாகவும், மிக எளிதாகவும் பரவச் செய்யலாம் என்று கணிக்கப்படுகிறது.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதன்முறையாக B.1.617.2 டெல்டா கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. மரபியலுக்கான இந்திய கொரோனா கூட்டமைப்பின் கீழ் (INSACOG) மகாராஷ்ராவில் இருந்து அனுப்பப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, அவை 2020 டிசம்பர் மாதம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளுடன் ஒப்பிடப்பட்டன. இதில் மாறுபாடுகள் அதிகரித்து இருந்தது தெரியவந்தது. ஏப்ரல் 4-ஆம் தேதி புதிதாக கண்டறியப்பட்ட வைரஸ் (Variant of Interest (VoI)) எனவும், ஏப்ரல் 11ம் தேதி இது கவலையளிக்க கூடியதாகவும் (VoC) வகைப்படுத்தப்பட்டது. இந்த மாறுபாடுகளுடன் கூடிய வைரஸ், இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் பாதிப்பை அதிகரிக்கச் செய்தன.
டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ்:
இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘டெல்டா உருமாறிய கொரோனா வைரஸ் மரபணு அமைப்புகளில் ஏற்பட்ட மாற்றங்களால் 'டெல்டா பிளஸ் வகை வைரஸ் உருவானது. ஆனால், இது இந்தியாவுக்கு வெளியே தான் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இதுவரை இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா நோய்த் தொற்றால் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் முதன்முறையாக நேற்று ஒருவருக்கு டெல்டா பிளஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது
இதுநாள் வரையில், ‘டெல்டா பிளஸ்’ கொரோனாவின் தன்மை பற்றி யாருக்கும் தெரியாது. ஸ்பைக் புரதத்தில் K417N என்ற மாறுபாட்டை டெல்டா பிளஸ் கொண்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட வைரஸ் வகையிலும் இத்தகைய வேறுபாடு காணப்பட்டது. ஆனால், ஏற்கனவே, அதிகம் பரவக்கூடிய டெல்டா வகை வைரஸுகளில் K417N உருமாற்றம் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக அமைகின்றன. மேலும், K417N உருமாற்றம் கொரோனா தடுப்பூசியின் செயல்திறனை குறைக்கும் என மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, கொரோனா வைரஸ் அதன் ஸ்பைக் புரதங்களின் உதவியுடன் மனித உயிரணுக்களை பாதிக்கிறது. வைரஸின் ஸ்பைக் புரதம் மனித சுவாசக் குழாய் உயிரணுக்களின் மேற்பரப்பில் உள்ள ACE2 ஏற்பிகளுடன் பிணைத்துக் கொள்கிறது. வைரஸ் தொற்றியவுடன், வைரஸ் மரபணு மனித உயிரணுக்களில் நுழைந்து, வைரசின் ஆயிரம் பிரதிகள் வெறும் பத்து மணி நேரத்தில் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு உருவான வைரஸ்கள் அருகிலுள்ள அணுக்களுக்கு குடியேறுகின்றன.
புதிய கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தைச் செயலிழக்கச் செய்தால் மட்டுமே தொற்றுநோய்ப் பரவலைத் தடுக்க முடியும். இதனால் ஸ்பைக் புரதத்தில் உள்ள ஆன்டிஜென், தடுப்பூசிக்கு ஒரு முக்கியமான இலக்காகும். ஆன்டிபாடி ஸ்பைக் புரதத்தைத் தடுத்தால், வைரசால் அணுக்களில் நுழைந்து பல்கி பெருக முடியாது. தற்போது, ஒப்புதல் அளிக்கப்பட்ட அநேக தடுப்பு மருந்துகளும் இந்த ஸ்பைக் புரதத்தை தங்கள் இலக்காக வைத்திருக்கின்றன. ஆனால், சார்ஸ்- கோவ்- 19 தனது ஸ்பைக் புரதத்தில் K417N, T478K, P681R and L452R போன்ற மாறுபாடுகளுடன புதிதாக உருவாகி வருகிறது.
தடுப்பு நடவடிக்கை போதுமானது:
உருமாற்றம் பெற்ற கொரோனா வகைகள், சார்ஸ் - கோவ்- 19 வைரஸில் இருந்து முற்றிலும் மாறுபடாது என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் மூலம் பெருந்தொற்றை கண்டுக்குள் கொண்டு வரமுடியும். டெல்டா, டெல்டா பிளஸ், ஆல்பா, பீட்டா, காமா போன்ற மாறுபட்ட கொரோனாவை, எந்த ஆயுதம் கொண்டும் அழிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதை கண்காணித்து, அதன் தன்மையை புரிந்து கொண்டு, அதற்கேற்ற தடுப்பு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வலியுறுத்துகிறது.