வேலூரில் 87 புதிய கொரோனா பாதிப்பு : 16 பேர் உயிரிழப்பு
இன்று கொரோனா பாதிப்பின் தீவிரத்தால் இறந்தவர்கள் எண்ணிக்கை இரண்டு மட்டுமே , இன்று வெளியான மருத்துவ அறிக்கையில் மே மாதம் முதல் விடுபட்டுள்ள 14 கொரோனா இறப்புக்களை மொத்தமாக பதிவேற்றம் செய்துள்ளனர் . இதற்கான விளக்கத்தையும் மருத்துவ அறிக்கையில் தேதியோடு பதிவு செய்து இருக்கின்றனர்.
கடந்த மார்ச் மாத இறுதியில் தீவிரம் அடைந்த கொரோனா நோயின் இரண்டாவது ஆலையின் தாக்கத்தால் , வேலூர் மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலைக்கு இதுவரை 46377 நபர்கள் பாதிக்கப்பட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்தனர் . மேலும் தொடர் சிகிச்சையின் காரணமாக 45139 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் , கொரோனா இரண்டாவது அலைக்கு 975 நபர்கள் உயிர் இழந்துள்ளனர் . மேலும் வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா பாதித்தவர் மொத்த எண்ணிக்கை 232 ஆக இருந்தது இந்த நிலையில் இன்று ஒரே நாளில் புதியதாக 87 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு , 40 நபர்கள் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . மருத்துவ அறிக்கையின்படி இன்று 16 கொரோனா உயிர் இழப்புகள் பதிவு செய்யப்பட்டு , மாவட்டத்தில் கொரோனா நோய்க்கான சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 263 ஆக உள்ளது .
மாநிலத்தில் அதிகப்படியான கொரோனா மரணங்களில் வேலூர் மூன்றாவது இடம் .
சென்னை கோவை மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக கொரோனா உயிரிழப்புக்கள் ஆதிக்கம் பதிவாகிருகம் மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் இன்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது .மாநில சுகாதாரத்துறை அறிக்கையின்படி , இன்று மட்டும் தமிழ்நாட்டில் 7427 புதிய கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு , மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 61 ,329 ஆக உள்ளது .
மேலும் இன்று அதிகப்படியtன கொரோனா மரணங்கள் சென்னையில் பதிவாகியுள்ளது . சென்னையில் இன்று 25 கொரோனா மரணங்களும் , அதனை தொடர்ந்து கோய்ம்பத்தூரில் 23 மரணங்களும் , வேலூர் மாவட்டத்தில் 16 உயிர் இழப்புகளும் பதிவாகியுள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது .
இது தொடர்பாக வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணிவண்ணனிடம் பேசிய பொழுது , இன்று கொரோனா பாதிப்பின் தீவிரத்தால் இறந்தவர்கள் எண்ணிக்கை இரண்டு மட்டுமே , இன்று வெளியான மருத்துவ அறிக்கையில் மே மாதம் முதல் விடுபட்டுள்ள கொரோனா இறப்புக்களை மொத்தமாக பதிவேற்றம் செய்துள்ளனர் . இதற்கான விளக்கத்தையும் மருத்துவ அறிக்கையில் தேதியோடு பதிவு செய்து இருக்கின்றனர் என்று தெரிவித்தார் .
மேலும் ஆக்சிஜன் படுக்கைகள் குறித்த தகவல்களை பற்றி கேட்ட பொழுது , வேலூர் மாவட்டத்திலும் பிற மாவட்டங்களை போல் , நோய் தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் அதிகப்படியான ஆக்சிஜென் படுக்கைகள் காலியாகவே உள்ளதாக தெரிவித்தார் , துணை இயக்குனர் .
வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை 20 கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டுவருகின்றது . இதில் மொத்தமாக உள்ள ஆக்சிஜென் படுக்கைகள் எண்ணிக்கை 1149 , ஆக்சிஜென் அல்லாத படுக்கைகள் 597 மற்றும் ஐ சி யு படுக்கைகள் 347 உள்ளது , இதில் தற்சமயம் 896 ஆக்சிஜென் படுக்கைகளும் , 507 ஆக்சிஜென் அல்லாத படுக்கைகளும் மற்றும் 14 ஐ சி யு படுக்கைகளும் காலியாக இருப்பதாக சுகாதார துறை துணை இயக்குனர் மணிவண்ணன் தெரிவித்தார் .
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )