திருவண்ணாமலையில் 137 பேருக்கு கொரோனா; ஒருவர் உயிரிழப்பு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 137 நபர்களும் 1நபர்களும் இறந்துள்ளனர் மாவட்டத்தில் தடுப்பூசி 8025 நபர்களுக்கு செலுத்தப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை மாவட்டத்தில் 49 ஆயிரத்து 13பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 47ஆயிரத்து 386 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 137 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா தொற்றால் இறந்தவர்கள் 1 நபர்கள். இதுவரையில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் 592 ஆக உயர்ந்துள்ளது
மேலும் கொரோனா வைரஸ் தொற்றிக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் , தண்டரம்பட்டு , ஆரணி , செய்யார், வந்தவாசி , போளுர் , உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 1035 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. நகர் பகுதி கிராமங்கள் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்படும் பணி தொடரப்பட்டுள்ளது .
தற்போது 18 வயது முதல் 45 வயதுவரை உள்ளவர்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வரும்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகர் பகுதிகளில் உள்ளவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருகினறனர். மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் உள்ள பொது மக்களுக்கு சரியான முறையில் விழிப்புணர்வு இல்லாததால் தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டி வருகிறார். அதுமட்டுமின்றி இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நாட்களை அதிகரித்துள்ளதால். குறைந்த அளவிலேயே செலுத்திகொள்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 8025 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, மாவட்டம் முழுவதும் இன்று நடைபெற்று முகாமில் கோவேக்சன் முதல் தடுப்பூசி 2334 பேரும் ,இரண்டாவது தடுப்பூசி 322 பேரும் செலுத்தியுள்ளனர், மற்றும் கோவிஷீல்டு முதல் தடுப்பூசி 5179 நபர்களும் இரண்டாவது தடுப்பூசி 190 நபர்களும் செலுத்தியுள்ளனர்