கரூரில் இன்று 540 முகாம்களில் மெகா தடுப்பூசி முகாம் - 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு
’’காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் 50 ஆயிரம் தடுப்பூசிகள் முழுவதும் பொதுமக்கள் போட்டுக் கொள்ள வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது’’
தமிழ்நாடு முழுவதும் 35 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி போடும் வகையில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் 540 முகாம்கள் மூலம் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாமினை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் இதுவரை 75% மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தாந்தோணிமலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கரூர் தேர்வீதியில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி முகாமினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டார். காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 540 செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
கரூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 9 லட்சத்து 3 ஆயிரத்து 245 நபர்கள் உள்ளனர். இதுவரை நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் 5 லட்சத்து 23 ஆயிரத்து 42 நபர்கள் பயனடைந்துள்ளனர். இதில் 4 லட்சத்து 9 ஆயிரத்து 300 நபர்களுக்கு முதல் தவணை மற்றும் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 742 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் இதுவரை 57% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும், 4 லட்சத்து 93 ஆயிரத்து 945 நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டியுள்ளது. இன்று நடைபெறும் தடுப்பூசி முகாம் மூலமாக 10% பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளன என்றார். இந்த தடுப்பூசி சிறப்பு மிக முகாமில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர் பெருமக்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் இந்த மருத்துவ முகாம் வெற்றியடைய சிறப்பான முயற்சி எடுத்து வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் 50 ஆயிரம் தடுப்பூசிகள் முழுவதும் பொதுமக்கள் போட்டுக் கொள்ள வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர் மற்றும் நடக்க முடியாதவர்களுக்கு இல்லத்தில் சென்று தடுப்பூசி போடவும் மாவட்ட நிர்வாகம் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )