Tamilnadu Corona Update : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன தெரியுமா?
தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 1652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 23 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக புதியதாக 1,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 968 பேருக்கும், பெண்கள் 684 பேருக்கும் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 99 ஆயிரத்து 255 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
மாநிலத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் புதியதாக 183 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனாவால் 5 லட்சத்து 42 ஆயிரத்து 378 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் இன்று சென்னையைத் தவிர பிற 36 மாவட்டங்களில் ஆயிரத்து 469 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இதற்காக 69 அரசு ஆய்வகங்கள் மற்றும் 217 தனியார் ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.
சென்னையில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட 2 ஆயிரத்து 120 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 19 ஆயிரத்து 391 ஆகும். தமிழ்நாட்டில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் ஆண்கள் மட்டும் 15 லட்சத்து 17 ஆயிரத்து 975 பேர் ஆகும். பெண்கள் 10 லட்சத்து 81 ஆயிரத்து 242 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பில் இருந்து ஆயிரத்து 859 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 45 ஆயிரத்து 178 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா வைரஸ் காரணமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 19 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இன்று 23 பேர் உயிரிழந்ததால் தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 686 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக 8 ஆயிரத்து 375 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரசால் இன்று உயிரிழந்தவர்களில் 18 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள். 5 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள். இன்றைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும் 40 ஆயிரத்து 763 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 25 ஆயிரத்து 148 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 8 ஆயிரத்து 39 ஐ.சி.யு. படுக்கை வசதிகளும் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் இருக்கின்றன.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் அமலில் உள்ள ஊரடங்கை தமிழக அரசு மேலும் 2 வாரத்திற்கு நீட்டித்துள்ளது. அதே சமயத்தில், நீண்டநாட்களாக திறக்கப்படாமல் இருந்த பள்ளிகள் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகளும் 50 சதவீத பார்வையாளர்களுடன் நாளை மறுநாள் முதல் திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )