மேலும் அறிய

Tamilnadu Corona Update: தமிழ்நாட்டில் 4481 பேருக்கு கொரோனா; தஞ்சையில் 23 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 84 ஆயிரத்து 177 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 4 ஆயிரத்து 481 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,63,654 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 4,481 ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 84 ஆயிரத்து 177 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 32 ஆயிரத்து 759 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 257 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 275 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 249 ஆக உள்ளது.

கோவை 498, ஈரோடு 411, சேலம் 279, திருப்பூர் 256, தஞ்சாவூர் 248, செங்கல்பட்டு 198, நாமக்கல் 144, திருச்சி 198, திருவள்ளூர் 102, கடலூர் 127, திருவண்ணாமலை 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் மேலும் 102 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,721 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 78 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 24 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் இன்று 4 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8179 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சை 23, கோவை 10, ஈரோடு 5 பேர் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 17 பேர் உயிரிழந்தனர். அதிக மரணங்கள் எண்ணிக்கையில் சென்னையை முந்தியது தஞ்சை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 37,526 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 5,044 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,84,177 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

12 வயதிற்குட்பட்ட 194 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் குறைந்துள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 39516 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 26825ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 6126 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. 

பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.  பல இடங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தாலும், தஞ்சாவூரில் உயிரிழப்பு அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது. தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் உயிரிழப்பு அதிகரிப்பது, சிகிச்சை மீதான சந்தேகத்தை அதிகரித்துள்ளது. 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
TVK Vijay : “தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
“தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?BJP MP Bajan in Vande Bharat : ஓடும் ரயிலில் பஜனை! பாஜக MP-யின் சர்ச்சை வீடியோVCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
TVK Vijay : “தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
“தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
Aadhav Arjuna :  “ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த பரபரப்பு விளக்கம் இதுதான்..!
“ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த விளக்கம் இதுதான்..!
மசாஜ் சென்டர் சோதனை - ஜன்னல் வழியாக தப்ப முயன்ற பெண்கள்: சென்னையில் பரபரப்பு
மசாஜ் சென்டர் சோதனை - ஜன்னல் வழியாக தப்ப முயன்ற பெண்கள்: சென்னையில் பரபரப்பு
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
Embed widget