Covishield Vaccines Updates: 4.08 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள்; தமிழ்நாடு வந்தடைந்தது!
4.08 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 1076 கிலோ எடையில் 34 பாா்சல்களில் மகராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து இன்று மாலை 3.20 மணி விமானத்தில் சென்னைக்கு வந்து சோ்ந்தன.
தமிழகத்திற்கு மேலும் 4.08 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 1076 கிலோ எடையில் 34 பாா்சல்களில் மகராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து இன்று மாலை 3.20 மணி விமானத்தில் சென்னைக்கு வந்து சோ்ந்தன.
நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் மிகவும் தீவிரம் அடைந்தது வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு அந்த பரவல் தற்போது ஓரளவு குறைய தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பல இடங்களில் தடுப்பூசி தொடர்பான தவறான புரிதல் காரணமாக முதலில் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டி வந்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாற தொடங்கி பலர் தடுப்பூசி செலுத்த ஆர்வமுடன் வருகின்றனர்.
தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது. இதையடுத்து தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவா்கள் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது.பொதுமக்களும் ஆா்வமுடன் வந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்கின்றனா்.
Tamil Nadu CM MK Stalin writes to Union Health Minister Dr Harsh Vardhan, requesting to increase the allocation of vaccines to Tamil Nadu and also increase the sub-allocation of vaccines for government institutions to 90%.
— ANI (@ANI) June 28, 2021
(File photos) pic.twitter.com/4biebTEYbH
இதனால் தமிழகத்திற்கு அதிக அளவில் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.எனவே தமிழ்நாடு அரசு,ஒன்றிய அரசிடம் கூடுதல் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு அனுப்பி வைக்கும்படி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.ஆனால் ஜுன் மாதத்திய ஒதுக்கீடு முடிந்துவிட்டது என்று ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கடந்த இரு தினங்களாக தடுப்பூசிகளை அனுப்பவில்லை.இதனால் தமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த ஜுலை மாதம் ஒன்றிய தொகுப்பிலிருந்து 71 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மகராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து இன்று மாலை 3.20 மணிக்கு சென்னைக்கு வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 4.08 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 1076 கிலோ எடையில் 34 பாா்சல்களில் சென்னை பழைய விமானநிலையம் வந்தடைந்தன.
சென்னை விமானநிலைய லோடா்கள் அந்த தடுப்பூசிகள் அடங்கிய பாா்சல்களை விமானத்திலிருந்து கீழே இறக்கினா்.அதன்பின்பு தடுப்பூசி பாா்சல்களை தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு துறையினரிடம் சென்னை விமானநிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனா். அவா்கள் குளிா்சாதன வாகனத்தில் தடுப்பூசி பாா்சல்களை ஏற்றி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகம் எடுத்து சென்றனா். அங்கிருந்து தமிழகம் முழுவதும் தேவைக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )