TNCoronaUpdate: தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு; நிம்மதியில் முன்களப்பணியாளர்கள்..!
TNCoronaUpdate: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,094 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
TNCoronaUpdate: இன்றைய பாதிப்பு:
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,094 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தொற்று பாதிப்பால் இன்று புதிதாக யாரும் உயிர் இழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு- கொரோனா பாதிப்பு விவரம்:
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 35,51,641 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 35,03,47 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,033 பேர் என்று மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட நிலவரம்
சென்னையில், 239 பேருக்கும், செங்கல்பட்டு 94 பேருக்கும், கோவையில் 127 பேருக்கும், ஈரோடில் 20 பேருக்கும், சேலத்தில் 56 பேருக்கும், திருவள்ளூரில் 33 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 27 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பரிசோதனை:
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 28 ஆயிரத்து 219 பேருக்கு கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை தமிழ்நாட்டில் 6.8 (6,83,21,026) கோடி கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழப்பு:
இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 33 ஆக உள்ளது.
#TamilNadu | #COVID19 | 06 August 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) August 6, 20220
Today/Total - 1,094 / 35,51,641
Active Cases - 10,261
Discharged Today/Total - 1,431 / 35,03,347
Death Today/Total - 00 / 38,033
Samples Tested Today/Total - 28,219 / 6,83,21,026@
Test Positivity Rate (TPR) - 3.9%#TNCoronaUpdate #TN pic.twitter.com/q5KQ46tvb6
கொரோனாவில் இருந்து பாதுக்காக்க...
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க பொதுஇடங்களில் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். தேவையின்றி கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம். பொதுஇடங்களில் தனிமனித இடைவெளியை அவசியம் கடைப்பிடிக்கவும். கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நம்மை அச்சுறுத்தி வருகிறது. அதிலிருந்து பூரணமாக மீளும் வரை நாம் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டிய கட்டயாத்தில் இருக்கிறோம். ஒன்றிணைவோம்; கொரோனாவை வெல்வோம்.
கொரோனா வைரஸை குணப்படுத்த இதுவரை மருத்துங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. கொரோனா நம்மை தாக்கமால் பாதுக்காக்க தடுப்பூசி போட்டு கொள்வது மிக அவசியம். இரண்டு தவணை தடுப்பூசி உடன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போட்டுகொள்ளுங்கள். தடுப்பூசி போட்டு கொண்ட ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களுக்கே இரண்டு முறைக்கு மேல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது உங்களுக்கு நினைவு இருக்கும். உடல் ஆரோக்கியத்துடன் இருங்கள். நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருந்தால் தொற்று நம்மை அண்டாது.