TN Corona: தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 99 பேருக்கு கொரோனா தொற்று..எச்சரிக்கும் அரசு
தமிழ்நாட்டில் இன்று மேலும் புதிதாக 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சமீப நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று மேலும் புதிதாக 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் புதிதாக 26 பேருக்கும், கோவையில் 21 பேருக்கும், செங்கல்பட்டில் 15 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கடிதம்:
இந்திய நாட்டில் கொரோனா தொற்று, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிங்கள் மற்றும் ஒன்றிய பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியது. அதன்படி, கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார துறை கடிதம் எழுதியது.
அதில் தெரிவித்ததாவது ”கொரேனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டும். மேலும், மருத்துவமனையில் படுக்கைகள், மருத்துவ ஆக்சிஜன், மருந்துகள் கையிருப்பு ஆகியவற்றை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
DG ICMR Dr Rajiv Bahl and Secy, MoHFW Rajesh Bhushan write to all States/UTs on maintaining optimum testing for Covid-19 pic.twitter.com/xS5ycvqYa1
— ANI (@ANI) March 25, 2023
இதையடுத்து, தமிழ்நாட்டில் இன்று மேலும் புதிதாக 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் புதிதாக 26 பேருக்கும், கோவையில் 21 பேருக்கும், செங்கல்பட்டில் 15 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
கடந்த 2 ஆண்டுகளாக பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றானது மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சீனாவில் முதலில் பரவ தொடங்கியதாக கூறப்படும் கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. கடந்த சில மாதங்களாக இதன் தாக்கம் குறைந்திருந்த நிலையில், தற்போது அது மீண்டும் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
அதேபோல, பருவகால காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, பரவலை கட்டுப்படுத்த, மத்திய அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்தால் அதை கையாளும் வகையில் சுகாதார மையங்களில் பயிற்சி ஒத்திகை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், "இந்த ஒத்திகையில் அரசு மற்றும் தனியார் சுகாதார மையங்கள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒத்திகை குறித்த பிற தகவல்கள் வரும் மார்ச் 27ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களிடம் பகிர்ந்து கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
Also Read: TN Rain Update: அடுத்த 5 நாட்களுக்கு மழையா? வெயிலா? வானிலை எப்படி? லேட்டஸ்ட் அப்டேட்...!
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )