மேலும் அறிய

TamilNadu Covid-19 Daily Data Tracker: கடந்த 24 மணிநேரத்தில் 1603 பேருக்கு கொரோனா பாதிப்பு, 25 பேர் உயிரிழப்பு

அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 195 பேரும், சென்னையில் 172 பேரும், ஈரோட்டில் 143 பேரும், தஞ்சாவூரில் 104 பேரும் சேலத்தில் 94 பேரும், நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1603 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,02,489 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 195 பேரும், சென்னையில் 172 பேரும், ஈரோட்டில் 143 பேரும், தஞ்சாவூரில் 104 பேரும் சேலத்தில் 94 பேரும், நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.   

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 25,072 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 160 நாட்களில் இது மிகவும் குறைவு. தொடர்ந்து 57 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.

TamilNadu Covid-19 Daily Data Tracker: கடந்த 24 மணிநேரத்தில் 1603 பேருக்கு கொரோனா பாதிப்பு, 25 பேர் உயிரிழப்பு

குணமடைவோர் எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில் 1,863 பேர் குணமடைந்துள்ளனர்.  இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,48,868 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 98% என்றளவில் குணமடைந்துள்ளனர். அதே சமயம், கடந்த 24 மணி நேரத்தில் 44,157 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.63 சதவீதமாக உள்ளது

இறப்பு எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்று காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 34,734 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 8383  பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுநாள் வரையில், மிகக் குறைந்த இறப்பு எண்ணிக்கையை அரியலூர் மாவட்டம் (246) பதிவு செய்துள்ளது.  கடந்த 10 நாட்களாக, மாநிலத்தின் சாராசரி இறப்பு எண்ணிக்கை 30 ஆக உள்ளது. 

சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை:  மாநிலத்தில், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 18,887 ஆக உள்ளது. இதில், 3ல் ஒருவர் சென்னை, கோயம்பத்தூர், தஞ்சாவூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கிட்டதட்ட  நான்கு மாதங்களுக்குப் பிறகு,  சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20,000க்கும் கீழ் குறைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 23% பேருக்கு தீவிர நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,33,924  ஆக உள்ளது. இது 155 நாட்களில் மிகவும் குறைவு. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.03 சதவீதம் மட்டுமே ஆகும்.

TamilNadu Covid-19 Daily Data Tracker: கடந்த 24 மணிநேரத்தில் 1603 பேருக்கு கொரோனா பாதிப்பு, 25 பேர் உயிரிழப்பு

தொற்று உறுதி விகிதம்: தமிழ்நாட்டில் தினசரி  தினசரி தொற்று உறுதி விகிதம் (Daily positivity Rate) 3ம் குறைவாக 1.0 ஆக உள்ளது. அதாவது, பரிசோதிக்கப்படும் 100 கொரோனா மாதிரிகளில் குறைந்தது 2 பேருக்கும் குறைவானோருக்கு மட்டுமே கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக இந்த விகிதம் 3 ஆக உள்ளது. 0.5 விழுக்காடுக்கும் குறைவாக இருந்த சென்னையின் தொற்று உறுதி விகிதம், தற்போது 0.7 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில், சராசரி தினசரி பரிசோதனை எண்ணிக்கை 25,௦௦௦ ஆக உள்ள நிலையில், தொற்று உறுதி விகிதம் 1-க்கும் கீழாக இருப்பது நிம்மதி அளிக்கக்கூடிய வகையில் உள்ளது. 

கொரோனா பரிசோதனை: கடந்த 24 மணிநேரத்தில், 1,53,068 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த  பரிசோதனைகளின் எண்ணிக்கை 4  (4,10,59,465) கோடியாக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி விகிதம் 5%க்கும் அதிகமாக இருந்தால், கொரோனா ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

தொற்று விகிதத்தின் மூலம், சமூக அளவில் sars-cov-2 (கொரோனா வைரஸ்) பரவலின் தற்போதைய நிலை என்ன என்பதையும், நோய்த்தொற்று தாக்கத்திற்கு ஏற்ற பரிசோதனைகள் செய்யப்படுகிறதா ? என்பதையும் கணக்கிடமுடியும். எனவே, உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் குறைந்து காணப்படுவதன்  மூலம் சமூக அளவில் கொரோனா வைரஸின் பாதிப்பு குறைந்து வருவதை உணர முடிகிறது. இந்த தொற்று உறுதி விகிதம், மூன்றாவது அலையை ஏற்படுத்தாது என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.   

புதிய அலைகள் வந்தாலும் சமாளிக்கலாம்: புதிய வகை தொற்றுகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இந்தியா சயின்ஸ் என்ற ஓடிடி தளத்திற்கு அளித்த பேட்டியில் புனேவில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்)- தேசிய நுண்கிருமி நிறுவனத்தின் (என்ஐவி) இயக்குநர் டாக்டர் பிரியா ஆப்ரஹாம் தெரிவித்துள்ளார். இருப்பினும், முகக் கவசங்களை முறையாக அணிய வேண்டும்.  தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்த வேண்டும். அதன் பிறகு அலைகள் உருவானாலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தார்.  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GT vs RCB LIVE Score: குஜராத் கேப்டன் சுப்மன் கில் அவுட்; உற்சாகத்தில் பெங்களூரு அணி!
GT vs RCB LIVE Score: குஜராத் கேப்டன் சுப்மன் கில் அவுட்; உற்சாகத்தில் பெங்களூரு அணி!
விழுப்புரம்: தவறான அறுவை சிகிச்சை? கர்ப்பிணி பெண் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்
விழுப்புரம்: தவறான அறுவை சிகிச்சை? கர்ப்பிணி பெண் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்
Breaking Tamil LIVE: ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு எப்போதும் நீக்கப்படாது - உ.பி பரப்புரையில் அமித்ஷா
ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு எப்போதும் நீக்கப்படாது - உ.பி பரப்புரையில் அமித்ஷா
Prajwal Revanna: பல பெண்கள், 2000 ஆபாச வீடியோக்கள் : வெளிநாடு தப்பிச்சென்ற பாஜக வேட்பாளர் ப்ரஜ்வால் ரேவண்ணா?
பல பெண்கள், 2000 ஆபாச வீடியோக்கள் : வெளிநாடு தப்பிச்சென்ற பாஜக வேட்பாளர் ப்ரஜ்வால் ரேவண்ணா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Thambi Ramaiah Speech | Bala on Samuthirakani :   ”1000 மாற்றுத்திறனாளி குழந்தைகள்! உடனே ஓடிவந்த சமுத்திரக்கனி” பாலா உருக்கம்Villupuram flying squad : ரூ.68,000-ஐ வாங்க 2 கிலோ நகை அணிந்து வந்த நபர்!அதிர்ந்த தேர்தல் அதிகாரிகள்Kadambur Raju  : ”சசிகலாவுக்கு எதுவும் தெரியாது! அரசியல்ல ஈடுபட்டது இல்ல” கடம்பூர் ராஜூ பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GT vs RCB LIVE Score: குஜராத் கேப்டன் சுப்மன் கில் அவுட்; உற்சாகத்தில் பெங்களூரு அணி!
GT vs RCB LIVE Score: குஜராத் கேப்டன் சுப்மன் கில் அவுட்; உற்சாகத்தில் பெங்களூரு அணி!
விழுப்புரம்: தவறான அறுவை சிகிச்சை? கர்ப்பிணி பெண் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்
விழுப்புரம்: தவறான அறுவை சிகிச்சை? கர்ப்பிணி பெண் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்
Breaking Tamil LIVE: ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு எப்போதும் நீக்கப்படாது - உ.பி பரப்புரையில் அமித்ஷா
ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு எப்போதும் நீக்கப்படாது - உ.பி பரப்புரையில் அமித்ஷா
Prajwal Revanna: பல பெண்கள், 2000 ஆபாச வீடியோக்கள் : வெளிநாடு தப்பிச்சென்ற பாஜக வேட்பாளர் ப்ரஜ்வால் ரேவண்ணா?
பல பெண்கள், 2000 ஆபாச வீடியோக்கள் : வெளிநாடு தப்பிச்சென்ற பாஜக வேட்பாளர் ப்ரஜ்வால் ரேவண்ணா?
PRESS, Police என தனிநபர் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை - போக்குவரத்து போலீசார் அதிரடி..!
PRESS, Police என தனிநபர் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை - போக்குவரத்து போலீசார் அதிரடி..!
TN Weather Update: வெயிலின் உக்ரம்.. 13 மாவட்டங்களில் 100 டிகிரி கடந்து பதிவான வெப்பநிலை.. எங்கெல்லாம் வெப்ப அலை இருக்கும்?
வெயிலின் உக்ரம்.. 13 மாவட்டங்களில் 100 டிகிரி கடந்து பதிவான வெப்பநிலை.. எங்கெல்லாம் வெப்ப அலை இருக்கும்?
தொடங்கியது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முன்பதிவு; எப்படி விண்ணப்பிக்கலாம்? எப்போது தேர்வு?
தொடங்கியது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முன்பதிவு; எப்படி விண்ணப்பிக்கலாம்? எப்போது தேர்வு?
Kamalhassan: மகளை மிஸ் பண்ணும்போது அப்பா கமல் இதைத்தான் பண்ணுவாராம்! - ஸ்ருதி உடைத்த உண்மை!
Kamalhassan: மகளை மிஸ் பண்ணும்போது அப்பா கமல் இதைத்தான் பண்ணுவாராம்! - ஸ்ருதி உடைத்த உண்மை!
Embed widget