Tamil Nadu Coronavirus LIVE : தினசரி கொரோனா பாதிப்பு 5000க்கும் கீழ் குறைந்தது
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE

Background
ஆந்திராவில் மேலும் 2,224 பேருக்கு கொரோனா
ஆந்திராவில் இன்று புதிதாக 2,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,714 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனாவால் இன்று 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் மேலும் 4804 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 4 ஆயிரத்து 804 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,60,895 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 4,804ஆக அதிகரித்துள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 70 ஆயிரத்து 678 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 32 ஆயிரத்து 6 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 291 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 308 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 291 ஆக உள்ளது.
கொரோனாவால் மேலும் 98 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,388 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 61 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 37 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் இன்று 4 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8165 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 9, கோவையில் 7, கடலூர், ராணிப்பேட்டையில் தலா 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் 20 நாட்களில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம்
சென்னையில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம் 20 நாட்களில் அமைக்கப்படும். கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள போதிய மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன - மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மேற்கு வங்கத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு
மேற்கு வங்க மாநிலத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 15ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். சலூன்கள், அழகு நிலையங்கள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கூடங்கள் 50% பேருடன் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், தனியார், கார்ப்பரேட் அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்படுவதாகவும் மம்மா அறிவித்துள்ளார்.
1.44 கோடி தடுப்பூசி டோஸ் பெறப்பட்டு 1.41 கோடி பேருக்கு போடப்பட்டுள்ளது
ஜூலை மாதம் 71 லட்சம் தடுப்பூசி டோஸ் தடுப்பூசி கொடுப்பதாக மத்திய அரசு கூறியுள்ளதாக தெரிவித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இதுவரை 1.44 கோடி தடுப்பூசி டோஸ் பெறப்பட்டு 1.41 கோடி பேருக்கு போடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

