Tamil Nadu Coronavirus LIVE : தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 4000 கீழ் குறைந்தது
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 3 ஆயிரத்து 867 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,57,791 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 3,867ஆக உள்ளது.
சென்னையில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் இல்லை
சென்னையில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் இல்லை. தடுப்பூசி வந்தவுடன் முகாம் குறித்து அறிவிக்கப்படும் - சென்னை மாநகராட்சி
தமிழ்நாட்டில் இன்று 3,867 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 3 ஆயிரத்து 867 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,57,791 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 3,867ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 96 ஆயிரத்து 287 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 33 ஆயிரத்து 432 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 222 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 227 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 222 ஆக உள்ளது.
கோவை 445, ஈரோடு 349, சேலம் 245, திருப்பூர் 225, தஞ்சாவூர் 227, செங்கல்பட்டு 184, நாமக்கல் 114, திருச்சி 166, திருவள்ளூர் 99, கடலூர் 96, திருவண்ணாமலை 127, கிருஷ்ணகிரி 87, நீலகிரி 74, கள்ளக்குறிச்சி 95, கன்னியாகுமரி 78, மதுரை 75, விழுப்புரம் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, வேலூரில் நேற்றைவிட இன்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
கொரோனாவால் மேலும் 72 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,005 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 54 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 18 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் இன்று 5 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8222 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் 8, சேலம் 7,திருச்சி, கோவை தலா 6 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் 15 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. பெரம்பலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.
பள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசி - இன்னும் முடிவெடுக்கவில்லை
பள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மருத்துவ வல்லுநர்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாளை முதல் கோவில்களில் தரிசனம் செய்ய அனுமதி
கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நாளை முதல் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 1.26 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் இதுவரை 1.26 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4.73 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் நிர்வகிக்கப்பட்டுள்ளது. இது, ஒரு நாளில் போடப்பட்ட அதிகபட்ச தடுப்பூசி எண்ணிக்கையாகும்.