Coronavirus LIVE Updates: கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரிப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
நாடு முழுவதும் 43 கோடிக்கும் அதிகமானோருக்கு (43,26,05,567) கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. 18-44 வயது பிரிவில் இருக்கும் 13,77,91,932 பேர் முதல் டோசையும், 60,46,308 நபர்கள் இரண்டாம் டோசையும் இதுவரை பெற்றுள்ளனர்.
கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரிப்பு
கேரள மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலேயே இருந்து வருகிறது.இன்றைய நிலவரப்படி அங்கே 17,466 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.மேலும் 66 மரணங்கள் பதிவாகியுள்ளன. பாசிட்டிவ் ரேட் தொடர்ந்து அதிகமாக உள்ளது இன்றைய நிலவரப்படி 12.3 சதவிகிதம் பதிவாகியுள்ளது.
டெல்லியில் இன்று 66 பேருக்கு கொரோனா
டெல்லியில் இன்று 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 72 பேர் குணமடைந்துள்ளனர்.
Delhi reports 66 new #COVID19 cases, 72 recoveries, and two deaths in the last 24 hours.
— ANI (@ANI) July 25, 2021
Active cases: 579
Total recoveries: 14,10,288
Death toll: 25,043 pic.twitter.com/iaKHHkrh9J
புதுடெல்லியில் நாளை முதல் திரையரங்குகள் செயல்பட அனுமதி
புதுடெல்லியில் கோவிட்-19 தொற்றுப் பரவல் குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில்களில் நாளை முதல் 100 சதவீத இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை முதல் திரையரங்குகள் செயல்பட அனுமதி
3,29,38,559 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் கையிருப்பில் உள்ளன
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 45 கோடிக்கும் (45,37,70,580) அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக 11,79,010 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன. இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 42,08,32,021 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 3 (3,29,38,559) கொரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.
கொரோனா நிவாரண உதவிப் பொருட்களுடன் இந்தோனேசியா சென்றடைந்தது ஐஎன்எஸ் ஐராவத் கப்பல்
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐராவத் கப்பல், கொவிட்-19 நிவாரண உதவிகளுடன் இந்தோனேசியாவின் ஜகார்தா துறைமுகத்தை நேற்று (ஜூலை 24, 2021) சென்றடைந்தது. பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தோனேசியாவிற்கு ஆதரவளிப்பதற்காக 5 கிரையோஜனிக் கொள்கலன்களில் 100 மெட்ரிக் டன் திரவ பிராணவாயு மற்றும் 300 செறிவூட்டிகளை இந்தக் கப்பல் கொண்டு சென்றுள்ளது.