மேலும் அறிய

புதுச்சேரி : 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரியில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரியில் 2 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 200-க்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் புதுச்சேரியில் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 114 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 21 ஆயிரத்து 880 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 205 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 661 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 866 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 98 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 231  (97.81 சதவீதம்) ஆக உள்ளது.

புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்துவருகிறது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது. குணமடைந்தோர் சதவீதம் 97.81. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் சரியாக அணிந்து, தனிநபர் இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடித்து, கை சுத்தம் பேணி, கொரோனா தடுப்பூசியும் போட்டுக்கொண்டால் கொரோனாவில் இருந்து முற்றிலும் விடுபடலாம்” என்று குறிப்பிட்டார். கொரோனா தாக்குதல் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதால் புதுச்சேரி மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.

புதுச்சேரி : 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; ஒருவர் உயிரிழப்பு

முழு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டால் மட்டுமே வழக்கமான நிலை திரும்பும் சூழல் நிலவுகிறது. மதுக்கடைகள் உட்பட அனைத்து கடைகளும் இரவு 9 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலை, பூங்காக்கள் காலை 5 மணிமுதல் காலை 9 மணிவரை நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்காக திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 100 நபர்கள் வரை பங்கேற்கலாம் என்றும் இறுதிச் சடங்குகளில் 20 நபர்கள் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே புதுச்சேரியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் கொரோனா கட்டுப்படுத்த முடியாமல் எண்ணிக்கை அளவில் பழைய நிலையிலேயே தொடர்கிறது. அடுத்தடுத்து உயிரிழப்புகளும் தொடர்கின்றன. கட்டுப்பாடுகளை இன்னும் தீவிரப்படுத்தினால்தான் அடுத்தடுத்த அலைகளை சமாளிக்கலாம். அதற்கு புதிதாக பொறுப்பேற்ற அரசு, அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

புதுச்சேரி : 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; ஒருவர் உயிரிழப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் புதுச்சேரியிலும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து கொரோனா தாக்கம் குறைந்ததால் ஜூன் மாத இறுதியில் புதுச்சேரியில் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. இருப்பினும் தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் புதுச்சேரி மற்றும் தமிழக பேருந்து சேவைக்கு வழியின்றி மக்கள் தவித்தனர். இதனிடையே தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி மாநிலத்திற்கு இயக்கப்படாமல் இருந்தன.

இந்த நிலையில் புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி அளித்து சனிக்கிழமை தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து திங்கள்கிழமை முதல் புதுச்சேரியிலிருந்து தமிழக பகுதிக்கும், தமிழகப் பகுதியில் இருந்து புதுச்சேரிக்கும் தமிழக அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலிருந்து சென்னை, கடலூர், விழுப்புரம், காரைக்கால், திருவண்ணாமலை உள்ளிட்ட மார்க்கங்களில் பேருந்துகள் இயக்கம் தொடங்கின. இரண்டு மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியிலிருந்து தமிழக பகுதிக்கும், அங்கிருந்து புதுச்சேரிக்கும் பேருந்துகள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக அரசியலில் மேலுமொரு முக்கியமான நாள்! மஞ்சள், சிவப்பு கொடிதான் விஜய் கொடியா ? 
தமிழக அரசியலில் மேலுமொரு முக்கியமான நாள்! மஞ்சள், சிவப்பு கொடிதான் விஜய் கொடியா ? 
Breaking News LIVE: ஒகேனக்கல்லில் குளிப்பதற்கு 39வது நாளாக தடை நீட்டிப்பு
ஒகேனக்கல்லில் குளிப்பதற்கு 39வது நாளாக தடை நீட்டிப்பு
Vaazhai Movie Review: இது வேற மாறி(ரி)! ரசிகர்களிடம் தழைத்ததா வாழை? முழு திரைவிமர்சனம் இதோ!
Vaazhai Movie Review: இது வேற மாறி(ரி)! ரசிகர்களிடம் தழைத்ததா வாழை? முழு திரைவிமர்சனம் இதோ!
Rasi Palan Today, August 22: எதிரிகளை துவம்சம் செய்யும் மேஷம்; வாக்குவாதம் வேண்டாம் ரிஷபம்: உங்கள் ராசிக்கான பலன்?
எதிரிகளை துவம்சம் செய்யும் மேஷம்; வாக்குவாதம் வேண்டாம் ரிஷபம்: உங்கள் ராசிக்கான பலன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Subramanian swamy slams Modi : ”பிரதமர் பதவிக்கு ஆப்பு! செப்.17 வர தான் டைம்”எச்சரிக்கும் சு.சுவாமிNTK Seeman : ”இப்படி பண்ணிட்டியே”தூக்கியடித்த சீமான்!cகலக்கத்தில் நாதகவினர்!DMK BJP : ”பாஜகவை வளர்க்கும் திமுக” ஸ்டாலின் ரகசிய கூட்டணி? அச்சத்தில் அதிமுகRahul gandhi : உடையும் INDIA கூட்டணி? பதற்றத்தில் காங்கிரஸ்! ராகுல் அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக அரசியலில் மேலுமொரு முக்கியமான நாள்! மஞ்சள், சிவப்பு கொடிதான் விஜய் கொடியா ? 
தமிழக அரசியலில் மேலுமொரு முக்கியமான நாள்! மஞ்சள், சிவப்பு கொடிதான் விஜய் கொடியா ? 
Breaking News LIVE: ஒகேனக்கல்லில் குளிப்பதற்கு 39வது நாளாக தடை நீட்டிப்பு
ஒகேனக்கல்லில் குளிப்பதற்கு 39வது நாளாக தடை நீட்டிப்பு
Vaazhai Movie Review: இது வேற மாறி(ரி)! ரசிகர்களிடம் தழைத்ததா வாழை? முழு திரைவிமர்சனம் இதோ!
Vaazhai Movie Review: இது வேற மாறி(ரி)! ரசிகர்களிடம் தழைத்ததா வாழை? முழு திரைவிமர்சனம் இதோ!
Rasi Palan Today, August 22: எதிரிகளை துவம்சம் செய்யும் மேஷம்; வாக்குவாதம் வேண்டாம் ரிஷபம்: உங்கள் ராசிக்கான பலன்?
எதிரிகளை துவம்சம் செய்யும் மேஷம்; வாக்குவாதம் வேண்டாம் ரிஷபம்: உங்கள் ராசிக்கான பலன்?
தீப்பெட்டி தொழிலை எப்படியாது காப்பாத்துங்க - நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்த உற்பத்தியாளர்கள்
தீப்பெட்டி தொழிலை எப்படியாது காப்பாத்துங்க - நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்த உற்பத்தியாளர்கள்
Nalla Neram Today(22-08-2024): சுப காரியங்களை எப்போது செய்யலாம்? இன்றைய நாளுக்கான பஞ்சாங்கம், நல்ல நேரம் இதோ!
சுப காரியங்களை எப்போது செய்யலாம்? இன்றைய நாளுக்கான பஞ்சாங்கம், நல்ல நேரம் இதோ!
Kamal on Kottukkaali : இயற்கைக்கு மட்டுமல்ல சிவகார்த்திகேயனுக்கும் நன்றி - 'கொட்டுக்காளி' பார்த்து பாராட்டிய கமல்
Kamal on Kottukkaali : இயற்கைக்கு மட்டுமல்ல சிவகார்த்திகேயனுக்கும் நன்றி - 'கொட்டுக்காளி' பார்த்து பாராட்டிய கமல்
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வேண்டிசேலத்தில் 108 தேங்காய் உடைத்து வழிபாடு!
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வேண்டிசேலத்தில் 108 தேங்காய் உடைத்து வழிபாடு!
Embed widget