மேலும் அறிய

Covid 19 Kerala Update: அலறும் எண்ணிக்கையில் கேரளா கொரோனா பாதிப்பு! 22 ஆயிரத்தை தாண்டியது!

புதிய பாதிப்புகளில் 100 சுகாதாரப் பணியாளர்கள் 120 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் மற்றும் 20960 பேரில் 876 பேருக்கு தொற்று எப்படிப் பரவியது என்கிற விவரம் சரிவரத் தெரியவில்லை.

கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி மட்டும் அங்கே 22056 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் அங்கே ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,27,301 என அதிகரித்துள்ளது.நேற்று மட்டும் 131 பேர் இறந்த நிலையில் அங்கே மொத்தம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16457 என உள்ளது. 17761 பேர் நேற்று குணமடைந்த நிலையில் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  31,60,804 ஆக உள்ளது.இதுவரை அங்கே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,49,534 என அந்த மாநில அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கே 196902 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.அவற்றில்  கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை 11.2 சதவிகிதமாக உள்ளது. அதிகபட்சமாக மல்லபுரத்தில் 3931 பேரும், திருச்சூரில் 3005 பேருக்கும் கோழிக்கோட்டில் 2400 பேருக்கும் எர்ணாகுளத்தில் 2397 பேருக்கும் பாலக்காட்டில் 1649 பேருக்கும் கொல்லத்தில் 1462 பேருக்கும் அலப்புழாவில் 1461 பேருக்கும் கண்ணூரி 1179 பேருக்கும் திருவனந்தபுரத்தில் 1101 பேருக்கும் கோட்டயத்தில் 1067 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய பாதிப்புகளில் 100 சுகாதாரப் பணியாளர்கள் 120 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் மற்றும் 20960 பேரில் 876 பேருக்கு தொற்று எப்படிப் பரவியது என்கிற விவரம் சரிவரத் தெரியவில்லை. தற்போது வரை அங்கே 446211 பேர் மாவட்ட வாரியாக தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 419098 பேர் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். மீதம் 27113 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர்.

முன்னதாக,  தமிழ்நாடு, கர்நாடகாக, மகராஷ்டிரா, ஆந்திரா  போன்ற மாநிலங்களில் கண்டறியப்படும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக சரிந்தது. இருப்பினும், 10,௦௦௦க்கும் அதிகமான தினசரி பாதிப்புகளை கேரளா கடந்த ஒரு மாத காலமாக பதிவு செய்து வருகிறது. 

Covid 19 Kerala Update: அலறும் எண்ணிக்கையில் கேரளா கொரோனா பாதிப்பு! 22 ஆயிரத்தை தாண்டியது!

இந்த ஏற்றத்திற்கு காரணம் என்ன?

முன்னர் பிரபல வைராலஜிஸ்ட் மருத்துவர் ககன்தீப் காங் இது குறித்து தனது ட்விட்டர் குறிப்பில் பதிவு செய்திருந்தார். அதில் " கொரோனா பரிசோதனை மற்றும் நோய்த் தொற்று கண்டறியப்படுவதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறைவான  இறப்பு விகிதம் இருப்பதால்  பெருந்தொற்று அம்மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பை வலுவிழக்க செய்யவில்லை என்பதை உணர முடிகிறது. கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, கேரளாவைப் போல் தயார் நிலையில் இருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

உதாரணமாக, கொரோனா தொற்று பரிசோதனை மூலம்  தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 3.5% பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம், தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்ட மாவட்ட அளவிலான  சீரோ சர்வே ஆய்வில், மொத்த மக்கள்தொகையில் 23% பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. எனவே, 7ல் 1 என்றளவில் தான் கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் கண்டறியப்படுகிறது.  மேலும், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை விட தடுப்பூசி நிர்வகிப்பதில் கேரளா முன்னிலை வகிக்கிறது. அம்மாநிலத்தில், 45% பயனாளிகளுக்கு முதல்கட்ட தடுப்பூசியும், 10%க்கும் அதிகமான பயனாளிக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி டோஸ்களும் போடப்பட்டுள்ளன.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
Embed widget