கரூர்: இன்று 30 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு!
தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக கரூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை.
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர் நிலவரம் நாள்தோறும் சுகாதாரத் துறையின் சார்பாக அறிவித்து வருகின்றனர். அதன்படி இன்று ஒரே நாளில் கரூர் மாவட்டத்தில் 30 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து இன்று வரை கொரோனா தொற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் கொரோனா தொற்று சிகிச்சையில் பலனின்றி இறந்தவர் எண்ணிக்கை 0 ஆக உள்ளது.
கரூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர் மொத்த நிலவரப்படி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,249 ஆகும், கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் எண்ணிக்கை 21,638 ஆகும், தற்போது சிகிச்சையில் உள்ள நபர்களின் எண்ணிக்கை 265 ஆகவும், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு எண்ணிக்கை 346 ஆகவும் உள்ளது.
கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வார காலமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் நாள் தோறும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் முகாம் மூலம் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தது. இந்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று காலை பல்வேறு சிறப்பு முகாம் மூலம் நடைபெற்று வரும் இந்த தடுப்பூசி முகாம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து நாளை தடுப்பூசி போடும் இடங்களை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் நாளையும் தடுப்பூசி போடுவது இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது கூடுதல் தகவல். அதே போல் கரூர் மாவட்டத்தில் 10 க்கு மேற்பட்ட பஞ்சாயத்துகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த காய்ச்சல் முகாமில் பொதுமக்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்று தங்களுக்கு சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மாவட்டத்தில் இன்னும் பல்வேறு ஊர்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடாத நிலையில் கூடுதலாக சிறப்பு முகாம் மூலம் தடுப்பூசி போட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு தளர்வு அறிவித்து அதன்படி பல்வேறு நிதி நிறுவனங்கள், ஆலயங்கள், ஜவுளி நிறுவனங்கள், அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள், நகைக்கடைகள், கொசுவலை உள்ளிட்ட கடைகளிலும், அரசு மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தமிழக அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )