மேலும் அறிய
காஞ்சிபுரம்: 37 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்று ஒரேநாளில் 37 -ஆக உள்ளது

கொரோனா தடுப்பூசி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தொற்று பரவும் வேகம் சற்று குறைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொருத்தவரை கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுக்குள் இருக்கிறது. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50-க்கும் கீழ் குறைந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37. அதேபோல் இன்று ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 36 -ஆக உள்ளது. அதேபோல், இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் இறப்பு எண்ணிக்கை 2.

நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 6505 மாதிரிகளை சோதனை செய்ததில் 37 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73474 சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 71891 தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 344 , காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் சிகிச்சை பெற்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1239-ஆக உள்ளது.
அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 101, செங்கல்பட்டு மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இன்று வீடு திரும்பிய எண்ணிக்கை 98. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பிய எண்ணிக்கை 163340. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2458.

நாளை தடுப்பூசி போடப்படும் இடங்கள்
காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 18 வயது முதல் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கீழ்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது. P.T.V.S.மேல்நிலைப் பள்ளி - பூக்கடை சத்திரம்,பச்சையப்பன் ஆடவர் மேல்நிலைப்பள்ளி, மூங்கில் மண்டபம், ஆரம்ப சுகாதார நிலையம்- பஞ்சுப்பேட்டை ,ஆரம்ப சுகாதார நிலையம்- பிள்ளையார்பாளையம், ஆரம்ப சுகாதார நிலையம், சின்ன காஞ்சிபுரம், ஆரம்ப சுகாதார நிலையம், செவிலிமேடு, ஆரம்ப சுகாதார நிலையம், நத்தப்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்படுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்று குறைந்தாலும் பொதுமக்கள் சமூக பொறுப்புடன் முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்டவற்றை பின்பற்றினால் மட்டுமே வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக விடுபட முடியும் என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement