வலி இல்லாத கொரோனா தடுப்பூசி; குத்துறதும் தெரியாது... கத்துறதும் தெரியாது!
ZyCov-D தடுப்பு மருந்திற்கான 3 கட்ட சோதனைகளை 12-18 வயதுக்கு உட்பட்டவர்கள் உட்பட சுமார் 28 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஊசி இல்லாமல் ஸ்பிரிங் மூலம் இயங்கும் ஒரு கருவியைக்கொண்டு சருமத்தினை துளைத்துச் செல்லக்கூடிய ZyCov-D கொரோனா தடுப்பு மருத்தினை மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கு Zydus Cadila என்ற மருத்துத் தயாரிப்பு நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது.
கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிப்பினைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கான விலையினையும் நிர்ணயித்துள்ளது. ஆனாலும் தடுப்பூசி என்றாலே மக்கள் அச்சம் கொள்ளும் நிலை இன்னும் மாறவில்லை என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் கைகளில் வலி அதிகமாக இருப்பதோடு காய்ச்சல் ஏற்படும் என்பது போன்ற மனநிலை பெரும்பாலான மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாவே பலர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு முன்வருவதில்லை. குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்த நிலையில் தான் ஊசியில்லா தடுப்பூசியினை குஜராத் மாநிலம் அகமதாபாத்தினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Zydus Cadila நிறுவனம் கண்டுபிடித்துள்தோடு 3 கட்ட பரிசோதனைகளும் முடித்து விட்டு மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது.
தற்பொழுது நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் முதல் அலை, இரண்டாம் அலை என்பதோடு மாறுபட்ட டெல்டா வகை கொரோனாவாகவும் உருவெடுத்துள்ளது. இந்த சூழலில் நோய் தொற்றின் தாக்கத்திலிருந்து மக்களைக் காத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த வழியாக இருக்கும் என மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக இந்தியாவில் முதலில் சீரம் நிறுவனத்தின் கோவிஷூல்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதோடு அதனை மருத்துவர், செவிலியர் போன்ற முன்களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது. இதனையடுத்து தற்பொழுது பாரத் பயோடெக்கின் கோவாக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்துகள் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. இதோடு கடந்த சில நாட்களுக்கு முன்பாகத்தான் அமெரிக்காவின் மாடர்னா மருந்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தினை தலைமையிடாக கொண்டு செயல்படும் Zydus Cadila என்ற மருத்து தயாரிப்பு நிறுவனம் ஊசி இல்லாமல் 3 தவணையில் ஸ்பிரிங் மூலம் இயங்கும் ஒரு கருவியைக்கொண்டு சருமத்தினை துளைத்து செல்லக்கூடிய ZyCov-D கொரோனா தடுப்பு மருந்தினை 3 கட்ட சோதனையை முடித்து தற்பொழுது பயன்பாட்டிற்குக் கொண்டு வர அனுமதி கோரியுள்ள நிலையில் தடுப்பு மருந்து செயல்படும் விதம் மற்றும் என்னென்ன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற விபரங்களை நாமும் தெரிந்து கொள்வோம்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தினை தலைமையிடமாக்கொண்டு செயல்பட்டு வரும் Zydus Cadila என்ற நிறுவனம் மத்திய அரசின் மத்திய அரசின் உயிரிதொழில்நுட்பத் துறை மற்றும் ஐ.சி.எம்.ஆர் ஆகியவற்றுடன் இணைந்து ZyCov-D தடுப்பு மருந்தினை கண்டறிந்துள்ளது. எந்த அளவிற்கு தடுப்பு மருந்தில் செயல்திறன் உள்ளது மற்றும் எப்படி மக்களைப்பாதுகாக்கிறது என்பதனை அறிந்துகொள்ள 12-18 வயதுக்கு உட்பட்டவர்கள் உட்பட சுமார் 28 ஆயிரம் பேரினை கொண்டு 3 கட்ட பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக இந்த தடுப்பு மருந்துகள் மற்றவையைப்போல் ஊசி இல்லாமல் ஸ்பிரிங் மூலம் இயங்கும் ஒரு கருவியைக்கொண்டு சருமத்தினை துளைத்து உடலினுள் செலுத்தப்படுகிறது. இதனை 28 நாட்கள் இடைவெளியில் 3 டோஸ்களாக இதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது.
தற்பொழுது 3 கட்ட சோதனைகள் மேற்கொண்ட நிலையில், 67% பேருக்கு தொற்று ஏற்படவில்லை எனவும், இந்த பரிசோதனைகள் அனைத்தும் கொரோனா தொற்றின் 2 வது அலை காலக்கட்டத்தில் மேற்கொண்டதால் டெல்டா வகை கொரோனாவிலிருந்து மக்களை அதிகளவில் பாதுகாக்கும் என Zydus Cadila நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஒருவரின் உடலில் செலுத்தும் போது உடலில் உள்ள முள்போன்ற அமைப்பு ஏற்படும் நிலையில் அது நோய் எதிர்ப்பு மண்டலத்தினை அடையாளம் கண்டு, வைரசுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் திறனைக்கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )