சேலம் மாவட்டத்தில் புதிதாக 105 பேருக்கு தொற்று உறுதி
சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை . மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1537 ஆக உள்ளது.மேலும் 145 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினார். இதுவரை சேலம் மாவட்டத்தில் 89,797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,840 ஆக உயர்வு. மாவட்டத்தில் 1,506 பேர் கொரோனாவிற்கு
சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவான படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று 5063 பரிசோதிக்கப்பட்டதில் 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் இன்று வரை 9 லட்சத்து 49 ஆயிரத்து 670 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாளை சேலம் மாவட்டத்தில் உள்ள 138 மையங்களிலும் 21 ஆயிரத்தி 500 இரண்டாம் தவணை கோவிஷில்டு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் தங்கள் குடியிருப்பிற்கு அருகில் உள்ள தடுப்பூசி மையங்களை அணுகி சமூக இடைவெளி கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்து மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பு இல்லாத காரணத்தினால் இன்று சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தப்படவில்லை.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி கொரோனா பதிவு :
தர்மபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக 32 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று உயிரிழப்பு ஏதுமில்லை . மேலும் 55 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 368 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் 25,321 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,921 ஆக உயர்வு. கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 2021 பரிசோதிக்கப்பட்டதில் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து இன்று ஒரே நாளில் 23 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை . நோயிலிருந்து குணமடைந்த 45 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 351 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40,472 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41,144 ஆக உயர்வு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 2015 பரிசோதிக்கப்பட்டதில் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 808 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,44,219 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,808 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )