(Source: ECI/ABP News/ABP Majha)
கரூர் : இரண்டாவது ஞாயிறு ஊரடங்கான இன்று வெறிச்சோடின தெருக்கள்..
கரூரில் முழு ஊரடங்கு : முக்கிய வீதிகள் வெறிச்சோடின. 400 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கழுகு பார்வை மூலம் கண்காணித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வாரத்தில் வருகின்ற அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்க பெறுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் இன்று இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக கரூர் மாவட்டத்தின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. மாவட்டம் முழுவதும் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் முக்கிய வீதிகள் ஆன பேருந்து நிலையம், கோவை ரோடு, செங்குந்தபுரம், தாந்தோன்றிமலை, வெங்கமேடு, வாங்கபாளையம்,ராயனூர், சுக்காலியூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீசார் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிற்கிணங்க மாவட்டம் முழுவதும் 30 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளில் 17 இடங்களில் சோதனை சாவடிகளும், 13 சோதனை சாவடிகள் நகரப்பகுதிகளில் அமைக்கப்பட்டு, (பால், மருத்துவம்) உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே பொதுமக்களை அனுமதிக்கப்படுகின்றனர். இதைத் தவிர வீணாக சுற்றித்திரியும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் கடும் எச்சரிக்கை விடுப்பதுடன் சில வாகனங்களுக்கு (ஸ்பாட் பைன்) அபராதம் விதிக்கின்றனர்.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவிற்கு பொதுமக்கள் முழு ஆதரவு தெரிவித்து தங்கள் இல்லத்தில் இருந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, முறையான காரணங்கள் சொல்லாமல், ”விடுங்கள் செல்கிறேன்” என்று கூறி வருவதால், அவற்றை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். உண்மையில் அவர் கூறும் பதில்கள் உண்மை என இருந்தால் அவர்களை நகரத்திற்குள் அனுமதிக்கின்றனர். இல்லை என்றால் அவர்களை திருப்பி அனுப்பிவிடுகின்றனர்.
தற்போது கரூர் மாவட்டத்தில் நாள்தோறும் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதால் மக்கள் முகக்கவசம் (மாஸ்க்), சமூக இடைவெளி உள்ளிட்ட தமிழக அரசின் விதிகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் நாள்தோறும் அறிக்கை மூலம் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X" target="">இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X
இந்த இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக நேற்று இரவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் அசைவ உணவுக்கு தேவையான (ஆட்டு கறி ,கோழி) உள்ளிட்ட இறைச்சிகளை வாங்கி சென்றனர். மொத்தத்தில் கரூரில் பல்வேறு வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அதைத்தொடர்ந்து இதனை கழுகு பார்வை மூலம் போக்குவரத்து மற்றும் போலீசார் இணைந்து படம் பிடித்து வருகின்றனர்.