மேலும் அறிய

மயிலாடுதுறை:  குறைந்துவரும் கொரோனா தொற்று, தொடரும் கட்டுப்பாடுகள்..!

ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று புதிதாக 135 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் உலக மக்களுக்கு பெரும் இன்னல்களையும், சவால்களையும் தந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு வல்லரசு நாடுகள் பலவும் வழிதெரியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவியதை அடுத்து, அதனைக் கட்டுப்படுத்த, தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒன்றாக தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பித்து நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கொரோனோ வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்தாலும்,  ஒரு சில மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் குறைந்தபாடில்லை.

மயிலாடுதுறை:  குறைந்துவரும் கொரோனா தொற்று, தொடரும் கட்டுப்பாடுகள்..!

நாளை முதல் தொற்று பரவல் நிலையை பொறுத்து 3 வகைகளாக மாவட்டங்களை பிரிந்து, தொற்று  குறைந்த மாவட்டங்களுக்கு மட்டும் நாளை முதல் மேலும்  தளர்வுகளை அதிகப்படுத்தியும், தொற்று அதிகமான மாவட்டங்களில் குறைவான தளர்வுகளுடன் ஊரடங்கை தமிழ்நாடு அரசு நீட்டிப்பு செய்துள்ளது. தொற்று அதிகரித்து காணப்படும் முதல் வகை 11 மாவட்டங்களின் பட்டியலில் மயிலாடுதுறை மாவட்டமும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஒருங்கிணைந்த நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் தொற்று 500 க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகிவந்தது. அது சற்று குறையத் தொடங்கி இன்றுடன் ஒரு வார காலமாக படிப்படியாக  குறைந்து இன்று 135 ஆக பதிவாகியுள்ளது. இது மாவட்ட மக்களிடையை நம்பிக்கையை ஏற்படுத்தி தளர்வுகளை எதிர்பார்த்த நிலையில் அரசு தொடர்ந்து தொற்று பரவும் மாவட்டங்களில் மயிலாடுதுறையும் உள்ளது.

மயிலாடுதுறை:  குறைந்துவரும் கொரோனா தொற்று, தொடரும் கட்டுப்பாடுகள்..!

இதுவரை மாவட்டத்தில் 37 ஆயிரத்து 94 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 35 ஆயிரத்து 160 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 135 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 390 பேர் குணமாகி சென்றுள்ளனர். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி இன்று மட்டும் 2 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனா வைரஸால் பலியாகியுள்ளனர் எண்ணிக்கை மாவட்டத்தில் 483 ஆக உயர்ந்துள்ளது.  மேலும் கொரோனா வைரஸ் தொற்றிக்காக ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, புத்தூர், வேதாரண்யம், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 1 ஆயிரத்து 451 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மயிலாடுதுறை:  குறைந்துவரும் கொரோனா தொற்று, தொடரும் கட்டுப்பாடுகள்..!

மேலும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. நிலையில் ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும்.  நகர்ப்பகுதி கிராமங்கள் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்படும் பணி தொடரப்பட்டுள்ளது என  மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாகத் அலி தெரிவித்துள்ளார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SRH vs LSG Match Highlights: ”காட்டுப்பயலுங்க சார்” லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய SRH!
SRH vs LSG Match Highlights: ”காட்டுப்பயலுங்க சார்” லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய SRH!
Thug Life: தக் லைஃப் ரிலீஸ் அப்டேட்.. இந்த வருஷம் மட்டும் 3 படங்கள்.. கமல் ரசிகர்ளுக்கு காத்திருக்கும் ட்ரீட்!
Thug Life: தக் லைஃப் ரிலீஸ் அப்டேட்.. இந்த வருஷம் மட்டும் 3 படங்கள்.. கமல் ரசிகர்ளுக்கு காத்திருக்கும் ட்ரீட்!
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் காவல் - நீதிமன்றம் உத்தரவு
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் காவல் - நீதிமன்றம் உத்தரவு
Google Wallet: இந்தியாவில் அறிமுகமானது ‘கூகுள் வாலட்’! பயன்படுத்துவது எப்படி? முழு விவரம்
Google Wallet: இந்தியாவில் அறிமுகமானது ‘கூகுள் வாலட்’! பயன்படுத்துவது எப்படி? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Pa Ranjith wish Nanguneri Chinnadurai | சின்னதுரைக்கு பரிசு வழங்கிய பா.ரஞ்சித்!நேரில் அழைத்து பாராட்டுSanju Samson | அப்போ கோலி.. இப்போ சஞ்சு..Umpire அட்ராசிட்டி!கதறும் ரசிகர்கள்Priyanka gandhi slams Modi | ”ராகுல் ராஜாதி ராஜா!அம்பானி, அதானியுடன் டீலா?”மோடிக்கு பிரியங்கா பதிலடிSeeman about Ilayaraja | ”இளையராஜா கேட்டது நியாயம்! நம்ம தப்பா புரிஞ்சுக்கிறோம்” ஆதரவாக பேசிய சீமான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SRH vs LSG Match Highlights: ”காட்டுப்பயலுங்க சார்” லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய SRH!
SRH vs LSG Match Highlights: ”காட்டுப்பயலுங்க சார்” லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய SRH!
Thug Life: தக் லைஃப் ரிலீஸ் அப்டேட்.. இந்த வருஷம் மட்டும் 3 படங்கள்.. கமல் ரசிகர்ளுக்கு காத்திருக்கும் ட்ரீட்!
Thug Life: தக் லைஃப் ரிலீஸ் அப்டேட்.. இந்த வருஷம் மட்டும் 3 படங்கள்.. கமல் ரசிகர்ளுக்கு காத்திருக்கும் ட்ரீட்!
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் காவல் - நீதிமன்றம் உத்தரவு
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் காவல் - நீதிமன்றம் உத்தரவு
Google Wallet: இந்தியாவில் அறிமுகமானது ‘கூகுள் வாலட்’! பயன்படுத்துவது எப்படி? முழு விவரம்
Google Wallet: இந்தியாவில் அறிமுகமானது ‘கூகுள் வாலட்’! பயன்படுத்துவது எப்படி? முழு விவரம்
அபாரம்! 13 வயது தமிழக மாணவிக்கு நார்வே தமிழ் திரைப்பட விருது - என்ன படம்?
அபாரம்! 13 வயது தமிழக மாணவிக்கு நார்வே தமிழ் திரைப்பட விருது - என்ன படம்?
தமிழ்நாட்டில் ஆவினுக்கு போட்டியாக களமிறங்குகிறதா அமுல்? பால்வளத்துறை சொன்ன பதில் இதுதான்!
தமிழ்நாட்டில் ஆவினுக்கு போட்டியாக களமிறங்குகிறதா அமுல்? பால்வளத்துறை சொன்ன பதில் இதுதான்!
உடல் குறைப்பு சிகிச்சையால் இளைஞர் உயிரிழப்பு! மருத்துவமனையை மூட அதிரடி உத்தரவு - சிகிச்சையில் என்ன தவறு?
உடல் குறைப்பு சிகிச்சையால் இளைஞர் உயிரிழப்பு! மருத்துவமனையை மூட அதிரடி உத்தரவு - சிகிச்சையில் என்ன தவறு?
ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து; எரிந்து கருகிய 5000 கோழிகள்
ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து; எரிந்து கருகிய 5000 கோழிகள்
Embed widget