மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா தொற்று நிலவரம் என்ன?
மதுரை மாவட்டத்தில் இன்று மட்டும் 13 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல் விருது நகர் மாவட்டத்திலும் இன்று மட்டும் 8 பேருக்கு நோய் தொற்று பரவல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில், கொரோனா நோய் தொற்றால் இன்று 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 91152-ஆக உயர்ந்துள்ளது. வைரைஸ் தொற்றிலிருந்து குணமடைந்து 3 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 89851-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1236 இருக்கிறது. இந்நிலையில் இன்று வரையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 65 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் மதுரையை சுற்றியுள்ள விருதுநகர், தேனி, திண்டுக்கல் , தூத்துக்குடி ஆகிய இடங்களில் விசாரித்தோம்.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று பரவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56877-ஆக உயர்ந்துள்ளது. இன்று வரையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 56293-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 554 -ஆக இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா நோய் தொற்று பரவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37485-ஆக உயர்ந்துள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 36818-ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 665 இருக்கிறது. இன்று வரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று பரவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50618-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 0 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 50072-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 533-ஆக இருக்கிறது. இன்று வரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 13பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு நோய் தொற்று பரவல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 65055-ஆக உயர்ந்துள்ளது. இன்று 3 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 64541-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 448 இருக்கிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் இன்று 66 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்