Covid-19 Vaccine Shortage | தடுப்பூசிக்காக காத்திருக்கும் தமிழ்நாடு : மாவட்டங்களில் நிலவரம் என்ன?
சில தினங்களாக வேகமாக போடப்பட்டு வந்த தடுப்பூசி தற்போது சுணக்கம் கண்டுள்ளது.
2021 இறுதிக்குள், நாட்டில் உள்ள அனைத்து வயது வந்தோருக்கும், தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று முன் தினம் பதிலளித்தது. தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சில தினங்களாக வேகமாக போடப்பட்டு வந்த தடுப்பூசி தற்போது சுணக்கம் கண்டுள்ளது. இதற்கு தடுப்பூசி தட்டுப்பாடே காரணம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி தர வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்
ஒருங்கிணைந்த நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை இரண்டு லட்சத்து 28 ஆயிரத்து 42 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும். நகர் பகுதி கிராமங்கள் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்படும் பணி தொடரப்பட்டுள்ளது என மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாகத் அலி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் நேற்று வரை 793612 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே போல் 554151 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி 6780 தடுப்பூசிகள் கையிருப்பு இருந்தது.
இரண்டு நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி இல்லாத காரணத்தினால் நேற்று முன் தினமும், நேற்றும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 92 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 22 ஆயிரம் நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும், செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்துவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும், தட்டுப்பாடின்றி தடுப்பூசியை மாவட்டத்திற்கு வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தடுப்பூசி நாளொன்றுக்கு 5000-ம் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிறப்பு முகாம் மூலம் போடப்பட்டது. இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களாக கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பிரத்யேகமான முறையில் தடுப்பூசி போடப்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் முகாமில் போடுவதை தற்காலிகமாக மாவட்ட சுகாதாரத்துறை நிறுத்தி வைத்துள்ளது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் 6078 மாற்றுத்திறனாளிகளுக்கு தங்கள் இல்லம் தேடி சென்று ஆம்புலன்ஸ் மூலம் தடுப்பூசி முகாம் நடத்தி வருவதை மாவட்ட சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் அதேவேளையில் பொதுமக்களுக்கும் தட்டுப்பாடின்றி தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று தமிழ்நாட்டிற்கு இரண்டு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன.
Game Addiction | ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் ஆபத்துகள்.. மனநல ஆலோசகரின் அறிவுரை!