மேலும் அறிய

புதுச்சேரி: 21 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி!

புதுச்சேரியில் மீண்டும் அதிகரிக்கிறது கொரோனா. இன்று ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 2 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் புதுச்சேரியில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 21 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 28 ஆயிரத்து 881 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 52 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 260 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 312 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 35 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 697 (98.31 சதவீதம்) ஆக உள்ளது. புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்துவருகிறது.

கொரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது. குணமடைந்தோர் சதவீதம் 98.31. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் சரியாக அணிந்து, தனிநபர் இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடித்து, கை சுத்தம் பேணி, கொரோனா தடுப்பூசியும் போட்டுக்கொண்டால் கொரோனாவில் இருந்து முற்றிலும் விடுபடலாம்” என்று குறிப்பிட்டார். கொரோனா தாக்குதல் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதால் புதுச்சேரி மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.

முழு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டால் மட்டுமே வழக்கமான நிலை திரும்பும் சூழல் நிலவுகிறது. மதுக்கடைகள் உட்பட அனைத்து கடைகளும் இரவு 9 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலை, பூங்காக்கள் காலை 5 மணிமுதல் காலை 9 மணிவரை நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்காக திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 100 நபர்கள் வரை பங்கேற்கலாம் என்றும் இறுதிச் சடங்குகளில் 20 நபர்கள் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே புதுச்சேரியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் கொரோனா கட்டுப்படுத்த முடியாமல் எண்ணிக்கை அளவில் பழைய நிலையிலேயே தொடர்கிறது. அடுத்தடுத்து உயிரிழப்புகளும் தொடர்கின்றன. கட்டுப்பாடுகளை இன்னும் தீவிரப்படுத்தினால்தான் அடுத்தடுத்த அலைகளை சமாளிக்கலாம். அதற்கு புதிதாக பொறுப்பேற்ற அரசு, அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

புதுச்சேரி: 21 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி!

தமிழகம் மற்றும் புதுவையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் புதுச்சேரியிலும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து கொரோனா தாக்கம் குறைந்ததால் ஜூன் மாத இறுதியில் புதுச்சேரியில் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. இருப்பினும் தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் புதுச்சேரி மற்றும் தமிழக பேருந்து சேவைக்கு வழியின்றி மக்கள் தவித்தனர். இதனிடையே தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி மாநிலத்திற்கு இயக்கப்படாமல் இருந்தன.

இந்த நிலையில் புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி அளித்து சனிக்கிழமை தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து திங்கள்கிழமை முதல் புதுச்சேரியிலிருந்து தமிழக பகுதிக்கும், தமிழகப் பகுதியில் இருந்து புதுச்சேரிக்கும் தமிழக அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலிருந்து சென்னை, கடலூர், விழுப்புரம், காரைக்கால், திருவண்ணாமலை உள்ளிட்ட மார்க்கங்களில் பேருந்துகள் இயக்கம் தொடங்கின. இரண்டு மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியிலிருந்து, தமிழக பகுதிக்கும், அங்கிருந்து புதுச்சேரிக்கும் பேருந்துகள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Pushpa 2 : நம்பி வாங்க! புஷ்பா 2 அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul, Priyanka Visit Sambhal : ”உள்ளே வராதீங்க ராகுல்” தடுத்து நிறுத்திய போலீசார் பாத்துக்கலாம் Bro! பிரியங்கா சவால்!நேற்று சேறு, இன்று பேனர்... கடும் கோபத்தில் மக்கள்! தலைவலியில் பொன்முடிநிர்மலாவை சந்தித்த திமுகவினர்ஸ்டாலின் கணக்கு என்ன?பின்னணியில் அதானி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Pushpa 2 : நம்பி வாங்க! புஷ்பா 2 அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?
சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?
Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
Mithunam New Year Rasi Palan: விபரீத ராஜயோகம்! 2025 மிதுனத்துக்குத்தான் ஜாக்பாட்! யோகத்தை பாருங்க
Mithunam New Year Rasi Palan: விபரீத ராஜயோகம்! 2025 மிதுனத்துக்குத்தான் ஜாக்பாட்! யோகத்தை பாருங்க
தாறுமாறாக ஓடிய பேருந்து; தலைநசுங்கி இளைஞர் உயிரிழப்பு - திண்டுக்கல்லில் சோகம்
தாறுமாறாக ஓடிய பேருந்து; தலைநசுங்கி இளைஞர் உயிரிழப்பு - திண்டுக்கல்லில் சோகம்
Embed widget