மேலும் அறிய

பீகார் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு 2025

(Source:  Poll of Polls)

Covid 19: புதுச்சேரியில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... தீவிர நடவடிக்கையில் இறங்கிய சுகாதாரத்துறை

புதுச்சேரியில் தற்போது மேலும் 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் ஜிப்மர், ஒருவர் தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி: புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததை புதுச்சேரி சுகாதாரத்துறை கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியது. எனவே, அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு, மாநில சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கொரோனா அறிகுறியுடன் வருபவர்களுக்கு கோரிமேட்டு பகுதியில் உள்ள காசநோய் மருத்துவமனை மற்றும் ஜிப்மரில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே 45 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரியில் தற்போது மேலும் 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் ஜிப்மர், ஒருவர் பிம்ஸ் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 5 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

10 படுக்கைகள் தயார்:

இதுகுறித்து சுகாதாரத் துறை இயக்குனர் ரவிச்சந்திரன் கூறுகையில், “புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை சார்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோரிமேட்டில் உள்ள காசநோய் அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆக்சிஜன், வென்டிலேட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. போதுமான மருந்துகள் கையிருப்பு உள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படும். எனவே பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை. யாருக்காவது கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக அவர்கள் கோரிமேட்டில் உள்ள காசநோய் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 45 பேர் குணமடைந்துள்ளனர்” என்றார்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நல வழித்துறை, குடிமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், தொற்று பரவாமல் தடுக்கவும் செய்ய வேண்டியவை. செய்யக்கூடாதவற்றைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறது.

செய்ய வேண்டியவை: நீங்கள் இருமல் அல்லது தும்மும்போது, கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரால் உங்கள் வாய் மற்றும் மூக்கை நன்றாக மூடவும். சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது ஆல்கஹால் சார்ந்த சானிடைசர் மூலம் உங்கள் கைகளை அடிக்கடி கழுவவும் நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும்.

 உங்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் தும்மல் இருந்தால் பொது இடங்களைவிட்டு விலகி இருங்கள். நன்றாக காற்று வசதி உள்ள அனைத்து அமைப்புகளிலும் வெளிப்புறக் காற்றுடன் போதுமான காற்றோட்டம் உள்ள இடங்களில் இருக்குமாறு சுகாதார துறை பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் வீட்டிலேயே இருங்கள் மற்றும் மற்றவர்களுடன் தொடர்பைக் கட்டுப்படுத்துங்கள்நிறைய தண்ணீர் குடிக்கவும், சத்தான உணவை உண்ணவும்.

டிஷ்யூ பேப்பர் & கை குட்டை (கர்சீஃப்) மீண்டும் மறுபயன்பாடு செய்யாதீர்கள். நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு அவர்கள் பயன்படுத்திய துண்டுகள், கைத்தறி போன்றவற்றைப் பகிர்தல். கண்கள், மூக்கு மற்றும் வாயை அடிக்கடி தொடுதல் கூடாது பொது இடங்களில் எச்சில் துப்புதல் கூடாது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுய மருந்து எடுக்க வேண்டாம்.

புதுச்சேரியில் தீவிர கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்த நபர்களை சிகிச்சை செய்வதற்கு புதுச்சேரிஅரசு பொது மருத்துவமணை, புதுச்சேரி அரசு மருத்துவ கல்லுரி, புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமணை ஆகிய இடங்களில் நான்குசுகாதாரம் மற்றும் குடும்ப நலவழித்துறை இயக்குனரகம் புதுச்சேரி அரசு நலவழித்துறை விடுக்கும் பத்திரிகை செய்தி குறிப்பு படுக்கைகள் பிரோத்தியமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வெண்டிலேட்டர் மற்றும் பிராணவாவு வசதிகளோடு புதுச்சேரி கோரிமேட்டில் அமைந்துள்ள மார்பு நோய் மருத்துவமணையில் பிரோத்தியமாக 6 (ஆறு) படுக்கைகள் கொண்ட வார்டு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பரவுவது குறித்து அச்சப்படத் தேவையில்லை மற்றும், புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குனர் மருத்துவர் ரவிசந்த்திரன் புது தில்லி உடன் ஒருங்கிணைந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.எனவே பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் யாவரும் பயப்பட வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Bihar Exit Poll Result: பீகாரில் அரியணை ஏறப்போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் பாஜக.?
பீகாரில் அரியணை ஏறப்போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் பாஜக.?
TN Rain: சென்னையில் திடீர் மழை! அலுவலகம் முடிந்து செல்வோர் அவதி.. வானிலை நிலவரம்
TN Rain: சென்னையில் திடீர் மழை! அலுவலகம் முடிந்து செல்வோர் அவதி.. வானிலை நிலவரம்
Bihar Election Record Polling: பீகாரில் வரலாறு காணாத வாக்குப்பதிவு; 2-ம் கட்டத்தில் 67%; ஆட்சியை பிடிக்கப் போவது யார்.?
பீகாரில் வரலாறு காணாத வாக்குப்பதிவு; 2-ம் கட்டத்தில் 67%; ஆட்சியை பிடிக்கப் போவது யார்.?
Bihar Election 2nd Phase: பின்னியெடுக்கும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு; பிற்பகல் 3 மணி வரை 60.40% - மாற்றத்தை நோக்கி பீகார்.?
பின்னியெடுக்கும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு; பிற்பகல் 3 மணி வரை 60.40% - மாற்றத்தை நோக்கி பீகார்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Terrorist Umar Mohammed Profile| பாகிஸ்தானின் SLEEPER CELL பழிதீர்க்க வந்த பயங்கரவாதியார் இந்த உமர்?
Delhi Car Blast CCTV | டெல்லி கார் குண்டு வெடிப்புபின்னணியில் காஷ்மீர் மருத்துவர்?சிசிடிவி காட்சிகள்
ஆட்டோ, விசில், பேட்... விஜய்யின் 10 சின்னம்! தேர்தல் ஆணையத்தில் தவெக
மழைக்கு ரெடியா? நவம்பர் நிலைமை என்ன?வெதர்மேன் அப்டேட்
Delhi Car Blast | செங்கோட்டை அருகேவெடித்து சிதறிய கார்பதற்றத்தில் டெல்லி!பரபரப்பு காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bihar Exit Poll Result: பீகாரில் அரியணை ஏறப்போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் பாஜக.?
பீகாரில் அரியணை ஏறப்போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் பாஜக.?
TN Rain: சென்னையில் திடீர் மழை! அலுவலகம் முடிந்து செல்வோர் அவதி.. வானிலை நிலவரம்
TN Rain: சென்னையில் திடீர் மழை! அலுவலகம் முடிந்து செல்வோர் அவதி.. வானிலை நிலவரம்
Bihar Election Record Polling: பீகாரில் வரலாறு காணாத வாக்குப்பதிவு; 2-ம் கட்டத்தில் 67%; ஆட்சியை பிடிக்கப் போவது யார்.?
பீகாரில் வரலாறு காணாத வாக்குப்பதிவு; 2-ம் கட்டத்தில் 67%; ஆட்சியை பிடிக்கப் போவது யார்.?
Bihar Election 2nd Phase: பின்னியெடுக்கும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு; பிற்பகல் 3 மணி வரை 60.40% - மாற்றத்தை நோக்கி பீகார்.?
பின்னியெடுக்கும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு; பிற்பகல் 3 மணி வரை 60.40% - மாற்றத்தை நோக்கி பீகார்.?
TASMAC Vs Consumer Court: டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா; ஊழியருக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்; இனியாவது திருந்துவார்களா.?!
டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா; ஊழியருக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்; இனியாவது திருந்துவார்களா.?!
குடும்பத்தையே பிரித்த ஆதவ் அர்ஜூனா... தூக்கி எறிந்த திமுக, விசிக- உண்மையை போட்டுடைக்கும் சார்லஸ் மார்ட்டின்
குடும்பத்தையே பிரித்த ஆதவ் அர்ஜூனா... தூக்கி எறிந்த திமுக, விசிக- உண்மையை போட்டுடைக்கும் சார்லஸ் மார்ட்டின்
TVK VIJAY: விஜய்க்கு கிடைக்கப்போவது இந்த சின்னமா.?  தேர்தல் ஆணையத்தில் லிஸ்ட்டை கொடுத்த தவெக
விஜய்க்கு கிடைக்கப்போவது இந்த சின்னமா.? தேர்தல் ஆணையத்தில் லிஸ்ட்டை கொடுத்த தவெக
SC on SIR Ban: SIR-க்கு தடை கோரிய வழக்கு; தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உத்தரவு; பணிகள் தொடரலாம் - உச்சநீதிமன்றம்
SIR-க்கு தடை கோரிய வழக்கு; தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உத்தரவு; பணிகள் தொடரலாம் - உச்சநீதிமன்றம்
Embed widget