மேலும் அறிய

Coronavirus LIVE Updates: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,949 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்

உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Coronavirus LIVE Updates: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,949 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்

Background

தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 908 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  நான்கு நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் 2வது நாளாக  பாதிப்பு குறைந்துள்ளது. 1,45,585 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,908  ஆக உள்ளது.

இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து  65 ஆயிரத்து 452 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 38 ஆயிரத்து 727 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 203 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 189 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 203  ஆக உள்ளது. 

கோவை 208, ஈரோடு 181, தஞ்சை 118, சேலம் 75, செங்கல்பட்டு 122, கடலூர் 79, திருச்சி 68, திருவள்ளூர் 84, நாமக்கல் 49, காஞ்சிபுரம் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. 

கொரோனாவால் மேலும் 29 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,159 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 23 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 7 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 3 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8322 பேர் உயிரிழந்துள்ளனர்.

19:39 PM (IST)  •  04 Aug 2021

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,949 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,949 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கோவையில் 226 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.    

13:45 PM (IST)  •  04 Aug 2021

தமிழ்நாட்டிற்கு இந்த மாதத்தில் 29 லட்சம் கொரோனா தடுப்பூசி

தமிழ்நாட்டிற்கு இந்த மாதத்தில் 29 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை அனுப்புவதாக மத்திய அரசு கூறியுள்ளதாகவும், கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா என்ற கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டியுள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

11:37 AM (IST)  •  04 Aug 2021

புதுச்சேரியில் மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கியது

புதுச்சேரியில் 15 நாட்களுக்கு பிறகு ஒருநாள் கொரோனா பாதிப்பு 100 ஐ தாண்டியுள்ளது. அங்கு ஒரே நாளில் 120 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு 1,21,252 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,789 ஆக அதிகரித்துள்ளது.

09:53 AM (IST)  •  04 Aug 2021

இந்தியாவில் மேலும் 42,625 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 42,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 36,668 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். ஒரேநாளில் 562 பேர் உயிரிழந்துள்ளனர்.

09:04 AM (IST)  •  04 Aug 2021

சென்னையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

சென்னையில் நீண்ட நாட்களாக கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள எந்த மையங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி  போடப்படாது என கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget