சேலம்: இன்று 180 பேருக்கு கொரோனா பாதிப்பு - 4 பேர் உயிரிழப்பு
சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 180 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் சேலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் . மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1503 ஆக உள்ளது. மேலும் 206 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினார். சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சேலம் மாவட்டத்தில் 87034 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90692 ஆக உயர்வு. மாவட்டத்தில் 2155 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 10 சதவீத படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 138 மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆம் தேதி 138 மையங்கள் மூலம் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்து ஒரு வாரமாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் தினந்தோறும் தடுப்பூசி போட ஆர்வத்துடன் வரும் பொதுமக்கள் தடுப்பூசி இருப்பு இல்லை என்கிற அறிவிப்பு பலகையை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை நீடித்து வருகிறது. குறிப்பாக ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் உரிய தேதியில் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். தட்டுப்பாடின்றி தடுப்பூசி தொடர்ந்து போடப்பட்டால் கூட்ட நெரிசலை தவிர்த்து அமைதியான முறையில் தடுப்பூசி செலுத்திட ஏதுவாக இருக்கும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இதுவரை சேலம் மாவட்டத்தில் 8,13,245 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தாலும் சேலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் இன்று அதிகம்.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி கொரோனா பதிவு : தர்மபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக 72 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று ஒருவர் உயிரிழப்பு. மேலும் 63 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 803 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து இன்று ஒரே நாளில் 53 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழப்பு. நோயிலிருந்து குணமடைந்த 65 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 723 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்
தமிழ்நாட்டில் இன்று 2 ஆயிரத்து 913 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,50,412 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 2,913 ஆக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 16 ஆயிரத்து 115 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 34 ஆயிரத்து 408 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 174 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )