மதுரை : 45 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 2 பேர் உயிரிழப்பு..!
மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1140-ஆக இருக்கிறது.
மதுரையில் தினசரி கொரோனா பாதிப்பு ஐம்பதுக்கும் கீழ் குறைந்து, இறப்பு எண்ணிக்கை ஐந்துக்கும் கீழ் குறைந்து இருப்பது சற்று ஆறுதல் அளித்துள்ளது. அதே போல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த இரண்டு, மூன்று மாதங்களில் இதுவரை 325 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 229 பேர் அறுவை சிகிச்சை மூலம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 96 பேர் கருப்பு பூஞ்சைக்கான சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டத்தில், இன்று மட்டும் 45 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 72897 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 61 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 71192 -ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1140 இருக்கிறது. இந்நிலையில் 585 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் மதுரையை சுற்றியுள்ள விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் நிலவரம் என்னவென காண்போம்.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று மட்டும் 39 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45013-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 26 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 43977 -ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 537 -ஆக இருக்கிறது. இந்நிலையில் 499 நபர்கள் கொரோனா பாதிப்பால் விருதுநகரில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று மட்டும் 51 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18156-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 41 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 17479-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 193-ஆக இருக்கிறது. இந்நிலையில் 482 நபர்கள் கொரோனா பாதிப்பால் சிவகங்கையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 8 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19785 -ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 12 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 19303-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 339 ஆக இருக்கிறது. இந்நிலையில் 143 கொரோனா பாதிப்பால் ராமநாதபுரத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மட்டும் 53 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27460 -ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 38 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26635-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 341 இருக்கிறது. இந்நிலையில் 484 கொரோனா பாதிப்பால் புதுக்கோட்டையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - MS Dhoni Birthday: மதுரை சச்சினுக்கு தோனி தான் பிடிக்குமாம்... நெகிழ்ச்சியான பேட்டி!