கரூரில் இன்று புதிதாக 17 நபர்களுக்கு தொற்று பாதிப்பு, சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு
நாளை ஒரேநாளில் 540 இடங்களில் 50 ஆயிரம் தடுப்பூசிகள் போட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து அந்த ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கரூர் மாவட்டத்தில் புதிதாக 17 நபர்களுக்கு தொற்று பாதிப்பு. இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 23264-ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று வீடு திரும்புவோர் 11 நபர்கள் ஆகும். கரூர் மாவட்டத்தில் இதுவரை வீடு திரும்புவோர் 22736 நபர்கள் ஆகும். கரூர் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். கரூர் மாவட்டத்தில் இன்று வரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 353 நபர்கள் ஆகும். கரூர் மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில் உள்ள நபர்கள் 175 ஆகும்.
கரூரில் இன்று 50 இடங்களில் 10050 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்படுகிறது. இதனால் பொது மக்கள் சிரமமின்றி தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகின்றனர். கரூர் நகர பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய தடுப்பூசி சிறப்பு மையமும் செயல்பட்டு வருகிறது. பத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. நாளை ஒரே நாளில் 540 இடத்தில் 50 ஆயிரம் தடுப்பூசிகள் போட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து அந்த ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
நாமக்கல்லில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை :-
நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக 52 நபர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதி. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 49,521 நபர்கள் ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 43 நபர்கள் ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 48,422 ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 478 ஆகும். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக 621 நபர்கள் மருத்துவமனையில் அனுமதி.
நாமக்கல் மாவட்டத்தில் நாளை 800-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரு லட்சம் தடுப்பூசிகள் போட இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தகவல். 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நாள்தோறும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பஞ்சாயத்துகளில் காய்ச்சல் முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு:-
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. கொரோனா தொற்றிலிருந்து இன்று 1,517 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெற்றுவந்த 27 பேர் இன்று உயிரிழந்த நிலையில், தற்போது 16,399 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.