கரூரில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு... இன்று உயிரிழப்பு ஏதுமில்லை
கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 351 இருக்கிறது. இந்நிலையில் 182 நபர்கள் கொரோனா பாதிப்பால் கரூரில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் மாவட்டத்தில், இன்று மட்டும் 14 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,579 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 13 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 22,046 -ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு இல்லை. இதனால் கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 351 இருக்கிறது. இந்நிலையில் 182 நபர்கள் கொரோனா பாதிப்பால் கரூரில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் அதிக அளவில் பெண்கள் கலந்து கொண்டு தடுப்பூசியை ஆர்வத்துடன் போட்டுக் கொண்டனர். இந்நிலையில் நாளை தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சிறப்பு முகாமில் போடப்பட்டு வந்த தடுப்பூசி முகாம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை தடுப்பூசி முகாம் இல்லை இருந்தபோதிலும் கரூர் மாவட்டத்தில் நாளை 20க்கும் மேற்பட்ட இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளது.
அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் இன்று தொற்று பாதித்தவர்கள் நிலவரம்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 47 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46956-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 62 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 45963-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 442 -ஆக இருக்கிறது. இந்நிலையில் 566 நபர்கள் கொரோனா பாதிப்பால் நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று எங்கும் தடுப்பூசி போடவில்லை அதேபோல் நாளை தடுப்பூசி போடுவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வராத நிலையில் மாவட்ட மக்கள் குழப்பம்.
தமிழகத்தில் மூன்றாவது அலை விரைவாக வரவிருக்கும் நிலையில் தமிழக அரசு அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. இருப்பினும் உலக சுகாதாரத்துறை மூன்றாவது அலை அதிக அளவில் குழந்தைகளை பாதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.
ஆகவே, மாவட்ட மக்கள் தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை இப்படி வெளியே செல்லும் பொழுது முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் தேவையில்லாத காரணத்திற்காக வீட்டைவிட்டு குழந்தைகளை எக்காரணம் கொண்டும் வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்த அளவில் இருப்பதால் மாவட்ட மக்கள் நிம்மதி.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )