கரூர் : இன்று புதிதாக 12 நபர்களுக்கு கொரோனா தொற்று..!
இன்று 9 இடங்களில் 3000 தடுப்பூசிகள், நாளை 18 இடங்களில் 7000 தடுப்பூசிகள் போட இருப்பதாக தற்போது மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்ட மக்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.
கரூரில் இன்று புதிதாக தொற்று பாதித்தவர்கள் 12 நபர்கள். இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 22974-ஆக உள்ளது. இன்று வீடு திரும்புவோர் எண்ணிக்கை 18, இதனால் கரூர் மாவட்டத்தில் 22433 நபர்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததவர்கள் யாரும் இல்லை.
இதனால் இதுவரை மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 351 உள்ளது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்றுவரை 190 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடாத நிலையில் இன்று 9 இடங்களில் 3000 தடுப்பூசிகள் போடப்பட்டன. அதைத் தொடர்ந்து, நாளை தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை 16 இடங்களில் 400 தடுப்பூசிகள் வீதம் 6,400 கோவிஷீல்ட் முதல் தவணை தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போட இருப்பதாகவும், அதைத்தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் தலா 300 வீதம் 600 கோவாக்சின் தடுப்பூசிகள் இரண்டாவது தவணை தடுப்பூசிகள் போட இருப்பதால் பொதுமக்கள் அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளன. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் தொற்று நிலவரத்தை தற்போது காணலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 52 நபர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 48283 நபர்கள் தொற்று பாதிப்பு உள்ளனர். இன்று சிகிச்சை முடிந்து 53 நபர்கள் வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் 47289 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
இன்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதித்து சிகிச்சை பலனின்றி இறந்தவர் எண்ணிக்கை 463-ஆக உள்ளது. தற்போது நாமக்கல் மருத்துவமனையில் 531 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் நாளை தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ரத்து. கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் தோற்றுவித்தவர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதால் சற்று மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
எனினும் தமிழக அரசு கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஆகவே பொதுமக்கள் வணிக நிறுவனங்கள் வியாபாரப் பெருமக்கள் தமிழக அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளி வருஷம் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளன.