கரூர் : புதிதாக 11 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!
கரூர் நகர பகுதியில் உள்ள பழைய அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய சிறப்பு தடுப்பூசி முகாம் செயல்பட்டு வருகிறது பொதுமக்கள் ஆர்வத்துடன் அங்கு தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகின்றனர்
கரூர் மாவட்டத்தில், நேற்று மட்டும் 11 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23054 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 23 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 22537-ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு இல்லை. இதனால் கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 352. இந்நிலையில் 165 நபர்கள் கொரோனா தொற்று பாதிப்பால் கரூரில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
கரூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று 26 இடங்களில் 8500 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளனர். அதேபோல் இன்று 12 பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் முகாமும் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக நாள்தோறும் 6 ஆயிரத்திற்கு மேல் தடுப்பூசிகள் போட்டு வருகின்றனர் இந்நிலையில் நாளையும் தடுப்பூசி இருக்கும் என்றேன் எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மாவட்ட மக்கள் சற்று நிம்மதியில் உள்ளன.
அதேபோல் நாமக்கல்லில் விசாரித்தோம்.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்றுமட்டும் 47 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48576-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 42 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 47556-ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் 466 -ஆக இருக்கிறது. இந்நிலையில் 554 நபர்கள் கொரோனா தொற்று பாதிப்பால் நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை இரண்டு நாட்களாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் தற்போது சற்று அதிகரித்துள்ளது. அதேபோல் வீடு திரும்பல் எண்ணிக்கை இரண்டு நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்து உள்ளது. கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது.
இருந்தபோதிலும், கடந்த ஒரு வார காலமாக நாமக்கல் மாவட்டத்தில் ஒருவர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த 3 வார காலமாக கரூரில் தொற்று பாதித்து உயிரிழப்பு ஏதும் இல்லாத நிலையில் நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று நாமக்கல்லில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.