மேலும் அறிய

Corona Vaccine Gap: கோவிஷீல்டு நீட்டிக்கப்பட்டது ஏன்? இந்திய விஞ்ஞானிகள் கேள்வி

8 முதல் 12 வார இடைவெளி என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்று, 12 முதல் 16 வாரங்கள் என்பது அரசாங்கம் கொண்டு வந்த ஒன்று. இது, சரியான முடிவாக இருக்கலாம். இல்லாமலும் போகலாம். ஏனெனில் நம்மிடம் அதற்கான தரவுகளும் இல்லை என்கிறார் எம்.டி.குப்தே.

நோய் எதிர்ப்புத் தன்மைக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய விஞ்ஞானிகள் (National Technical Advisory Group on Immunization (NTAGI)), கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்குமான இடைவெளியை 12-16 வாரங்களாக நீட்டிப்பதற்கான  எந்த தரவுகளும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.   

முன்னதாக, கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்குமான இடைவெளி 12 முதல் 16 வாரங்களாக நீட்டித்து டாக்டர் என் கே அரோரா தலைமையிலான நிபுணர் குழு (COVID Working Group) பரிந்துரை செய்ததாகவும், இதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாகவும், சுகாதாராத் துறை கடந்த மே 16ல் விளக்கம் அளித்தது.

மேலும், மருத்துவ ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு (குறிப்பாக இங்கிலாந்தில் இருந்து) கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை நீட்டிக்க செயற்குழு ஒப்புதல் தெரிவித்தது என்றும் மத்திய அரசு தெரிவித்தது. 

Corona Vaccine Gap: கோவிஷீல்டு நீட்டிக்கப்பட்டது ஏன்? இந்திய விஞ்ஞானிகள் கேள்வி

இந்நிலையில், " தடுப்பூசிக்கான இடைவெளியை அதிகரிப்பது தொடர்பான எந்த தரவுகளும் இல்லை" என நோய் எதிர்ப்புத் தன்மைக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவில் (NTAGI ) இடம்பெற்றுள்ள விஞ்ஞானிகள் குழு தெரிவித்தது. 14 உறுப்பினர்கள் கொண்ட இக்குழுவில், மூன்று விஞ்ஞானிகள் நிபுணத்துவ உறுப்பினர்களாக உள்ளனர். 

அரசு தொற்றுநோயியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் எம்.டி.குப்தே இதுகுறித்து ஆங்கில நாளிதழிடம் தெரிவிக்கையில்," முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்குமான இடைவெளியை 8 முதல் 12 வரை அதிகரிக்கலாம் என உலக சுகாதார அமைப்பால் அறிவுறுத்தியது. இதற்கு,NTAGI முழு ஆதரவளித்தது. 8 முதல் 12 வார இடைவெளி என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்று, 12 முதல் 16 வாரங்கள் என்பது அரசாங்கம் கொண்டு வந்த ஒன்று. இது, சரியான முடிவாக இருக்கலாம். இல்லாமலும் போகலாம். ஏனெனில் நம்மிடம் எந்த தரவுகளும் இல்லை" என்று தெரிவித்தார். Corona Vaccine Gap: கோவிஷீல்டு நீட்டிக்கப்பட்டது ஏன்? இந்திய விஞ்ஞானிகள் கேள்வி

     கோவிட்- 19 செயற்குழுவில் இடம்பெற்றுள்ள, டாக்டர் ஜே பி முல்லியால், (ஓய்வு பெற்ற பேராசிரியர், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர்) இது குறித்து கூறுகையில், " தடுப்பூசி இடைவெளியை அதிகரிப்பது குறித்து NTAGI க்குள் கலந்துரையாடல்கள் நடந்தன. 12-16 வாரங்கள் என்ற இடைவெளியை பரிந்துரைக்கவில்லை. அக்குழு எந்தவொரு   குறிப்பிட்ட இடைவெளி காலத்தையும் சுட்டிக்காட்டவில்லை," என்று தெரிவித்தாக Reuters செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.   

அந்த 3 நாட்களில் தடுப்பூசி போடலாமா? வதந்திகளுக்கு விடையளிக்கும் மருத்துவர்கள்!   

இரண்டு டோஸ்கள் போட்டால் தான் முழு பாதுகாப்பு:    

முன்னதாக, புதிய உருமாறிய (பி.1.617) கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசியின் முதல் மற்றும் 2வது டோஸ்களுக்கான இடைவெளியை 12 வாரங்களில் இருந்து 8 வாரமாக இங்கிலாந்து அரசு குறைத்தது.

கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசியின் செயல்திறன் குறித்து, இங்கிலாந்து அரசின் Public Health England என்ற சுகாதார  முகமை ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

அதில்,"பிஃபிசர் - பயோஎன்டெக் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்டவர்களில், 14 நாட்களுக்குப் பிறகு, இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய பி.1.617 தொற்றுக்கு எதிராக 88 சதவிகித பாதுகாப்பையும், இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொரோனா பி.1.1.7 தொற்றுக்கு எதிராக 93% பாதுகாப்பையும் பெறுகின்றனர். அஸ்ட்ரா ஜெனிகா /ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூச்சி (இந்தியா கோவிஷீல்டு) இரண்டு டோஸ் போட்டுக் கொண்டவர்களில், பி.1.617 தொற்றுக்கு எதிராக 60 சதவீத பாதுக்காப்பையும், பி.1.1.7 தொற்றுக்கு எதிராக 66% பாதுகாப்பையும் பெறுகின்றனர்.

அஸ்ட்ரா ஜெனிகா அல்லது பிஃபிசர் தடுப்பூசிகளின் முதல் டோஸ் மட்டும் எடுத்துக் கொண்டவர்களில், பி.1.617 தொற்றுக்கு எதிராக 3 வாரங்களில் 33 சதவிகித பாதுகாப்பையும், பி.1.1.7 வைரஸ் தொற்றுக்கு எதிராக 50 சதவிகித பாதுகாப்பையும் பெறுகின்றனர்" என்று ஆய்வுகள் தெரிவித்தன. 

உருமாறிய கொரோனா: 66 சதவீதம் செயலாற்றும் கோவிஷீல்ட்! இங்கிலாந்து ஆய்வில் தகவல்!

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget