கரூர், நாமக்கல்லில் கொரோனா நிலவரம் என்ன?
கரூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 19வது மெகா தடுப்பூசி முகாம் 502 இடங்களில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
கரூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 207 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பதித்தவர்களின் எண்ணிக்கை 26,544 ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் குணமடைந்தவர்கள் 74 பேர். கரூர் மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில் 1,087 நபர்கள் உள்ளனர். கரூரில் சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் உயிரிழப்பு.
கரூர் மாவட்டத்தில் இன்று 502 இடங்களில் 19ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்தநிலையில் நாளை முழு ஊரடங்கு உத்தரவால் சிறப்பு தடுப்பூசி முகாம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாள்தோறும் பத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. கரூர் நகர பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தடுப்பூசி சிறப்பு மையமும் செயல்பட்டு வருகிறது.
நாமக்கல்லில் கொரோனா தொற்று பாதித்தவர்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக 704 நபர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 58,914 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 376 பேர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் 55,615 நபர்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் உயிரிழப்பு இல்லை . நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 524 நபர்கள். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக 2,775 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தலைமை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் தடுப்பூசி முகாம் நடைபெற்ற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் காய்ச்சல் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X
தமிழகத்தில் இன்று 30,744 நபர்கள் புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் 23,372 நபர்கள் ஆகும். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் இன்று 33 நபர்கள். தற்போது வரை மருத்துவமனைகளில் சிகிச்சையில் 1,94,697 நபர்கள் உள்ளனர். கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் நாள்தோறும் தொற்று பாதித்தவர்கள் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருவதால் மாவட்ட மக்கள் தமிழ்நாடு அரசு தொற்று விதிகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )