Tn Covid Update: கோவை மண்டல கொரோனா பாதிப்பு: முதல் மூன்று இடத்தில் கோவை, ஈரோடு, சேலம்!
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பில் கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களில் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
தமிழ்நாட்டில் மேற்கு மாவட்டங்களில் தொடர்ந்து அதிக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் கோவை தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. அதேசமயம் கோவையில் மே மாதத்தில் ஏறுமுகத்தில் இருந்த கொரோனா தொற்று பாதிப்புகள், ஜீன் மாதத்தில் இறங்கு முகத்தில் உள்ளது. கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
கோவையில் இன்று 698 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 16 ஆயிரத்து 506 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 6721 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 1199 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 7 ஆயிரத்து 791 பேராக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று கோவையில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா தொற்றால் இன்று 26 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1994 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு, திருப்பூர், நீலகிரி நிலவரம்
தினசரி கொரொனா பாதிப்பில் ஈரோடு தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இன்று 597 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்தார். 865 பேர் குணமடைந்துள்ள நிலையில், 4695 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்புகள் 87 ஆயிரத்து 110 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 81849 பேர் குணமடைந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் 566 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 361 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 13 பேர் உயிரிழந்துள்ளனர். 462 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்புகள் 80789 ஆகவும், குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 77918 ஆகவும், மொத்த உயிரிழப்பு 736 ஆகவும் உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று 132 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 317 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. 782 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்புகள் 27858 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26921 ஆகவும், உயிரிழப்புகள் 155 ஆகவும் உள்ளது.
சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர் நிலவரம்
சேலம் மாவட்டத்தில் இன்று 398 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநில அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. 657 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2856 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்புகள் 86120 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 81832 ஆகவும், உயிரிழப்புகள் 1432 ஆகவும் உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 158 பேர் குணமடைந்துள்ள நிலையில், 817 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார். மொத்த பாதிப்புகள் 23956 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 22941 ஆகவும், உயிரிழப்புகள் 198 ஆகவும் உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 228 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 261 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2154 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்புகள் 43739 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 41180 ஆகவும், உயிரிழப்புகள் 405 ஆகவும் உள்ளது.
கரூர் மாவட்டத்தில் இன்று 69 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 71 பேர் குணமடைந்துள்ள நிலையில், 800 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. மொத்த பாதிப்புகள் 21820 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 20684 ஆகவும், உயிரிழப்புகள் 336 ஆகவும் உள்ளது.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பில் கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களில் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )