மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் மூன்றாவது அலையின் பாதிப்பு பெரியளவில் இல்லை. பொதுமக்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு முற்றாக குறைந்துள்ளது.
கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அனைத்து மாவட்ட ஆட்சியார்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார். வரும் 27ஆம் தேதி முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ளும்நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனையின்போது பேசிய முதலமைச்சர், “கடந்த ஒரு வாரத்தில் பல மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. வடமாநிலங்கள் மற்றும் ஐஐடியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க அரசு அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்வது நம் முன் இருக்கும் சவாலாகும். மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யும் வகையில் ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மூன்றாவது அலையின் பாதிப்பு பெரியளவில் இல்லை. பொதுமக்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு முற்றாக குறைந்துள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி தகுதியுள்ள 74.75% பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், அதன் தாக்கம் குறைவாகவே இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )