மேலும் அறிய

India Corona Spike: இந்தியாவில் மெல்ல மெல்ல குறையும் கொரோனா.. 7,533 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு.. இன்றைய நிலவரம் இதோ..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,533 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,533 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 

இந்தியாவில் இரண்டு வாரங்களுக்கு முன் 8 மாதங்களில் இல்லாத அளவு தினசரி கொரோனா பாதிப்பு 12,591 உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சில தினங்களாக சற்று குறைந்து பதிவானது. நேற்றைய தினம் 9,355 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் கிடு கிடுவென உயர்ந்து 7,533 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய தினத்தை விட சற்று குறைந்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 53,000 மாக குறைந்துள்ளது.

இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு 4,43,47,024 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  5,31,424ல் இருந்து 5,31,468 ஆக உயர்ந்துள்ளது. தொற்றிலிருந்து மீண்டு வருபவர்களின் சதவீதம் 98.69 சதவீதமாக பதிவாகியுள்ளது. இறப்பு விகிதமும் 1.18 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 44 பேர் இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 57,410 லிருந்து 53,852 ஆக குறைந்துள்ளது.  தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்பட்டாலும், சிகிச்சை பெற்று வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தொடர்ந்து இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 12,620 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து மகாராஷ்டிராவில் – 4874 பேர், தலைநகர் டெல்லியில் 4279 பேர், உத்திர பிரதேசத்தில் – 3550 பேர், தமிழ்நாடு – 3312 பேர், ஹரியானாவில் – 3993 பேர், குஜராத்தில் – 1502 பேர், ஹிமாச்சல் பிரதேசத்தில் – 1062 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 53,852 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 2,08,112 ஆர்டிபிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 7 பேர், மகாராஷ்டிராவில் 3 பேர், சத்தீஸ்கரில் 3 பேர், ஹரியானாவில் 2 பேர், மத்திய பிரதேசத்தில் 2 பேர், ராஜஸ்தானில் 2 பேர், தமிழ்நாட்டில் ஒருவர்  என மொத்தமாக 44 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வருவது போல, தமிழ்நாடிலும் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில்ம் கடந்த 24 மணி நேரத்தில் 382 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 532 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக 3,312 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chidambaram issue : முற்றிய தீட்சிதர்கள் வாக்குவாதம்! உடனே OFF செய்த நீதிபதி! OK சொன்ன அறநிலையத்துறைTemple AC Water : அது தீர்த்தம் இல்ல.. AC தண்ணி! உ.பி கோயிலில் அவலம்! ”டேய் பரமா படிடா”Rahul about Priyanka | ”அப்பாவை கொன்றவரைகட்டி அணைத்தவர் பிரியங்கா”கண்கலங்கிய ராகுல் காந்திIND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
"ரொட்டியையும் பெண்களையும் களவாடும் வங்கதேச குடியேறிகள்" மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
”I am not Interested -  ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
”I am not Interested - ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
Embed widget