Corona Tested Positive : மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா.. பெங்களூரு விமான நிலையத்தில் 3 பயணிகளுக்கு கண்டறியப்பட்ட தொற்று..
வெளிநாடுகளில் இருந்து பெங்களூரு வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பெங்களூரு வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அபுதாபி, ஹாங்காங் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் இருந்து திரும்பிய மூன்று பயணிகளுக்கு நேற்று இரவு பெங்களூரு விமான நிலையத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களிடம் எடுக்கப்பட்ட அனைத்து மாதிரிகளும் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மூன்று கொரோனா நோயாளிகளும் நகரத்தில் உள்ள பௌரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், கர்நாடக சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், டிசம்பரில் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்த 19 சர்வதேச பயணிகளுக்கு கொரோனா சாதகமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. 2020 முதல் பெங்களூரு மற்றும் மங்களூரு விமான நிலையங்களில் முறையே 3,594 மற்றும் 678 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன.
Today's Media Bulletin 28/12/2022
— K'taka Health Dept (@DHFWKA) December 28, 2022
Please click on the link below to view bulletinhttps://t.co/oTEyEHqoI6 @PMOIndia @MoHFW_INDIA @CMofKarnataka @BSBommai @mla_sudhakar @Comm_dhfwka @MDNHM_Kar @BBMPCOMM @mangalurucorp @DDChandanaNews @PIBBengaluru @KarnatakaVarthe pic.twitter.com/EpYXdqlVou
கர்நாடகாவில் புதன்கிழமை 39 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன, பெங்களூரு நகர்ப்புற மாவட்டத்தில் 27 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்:
கொரோனா தொற்றின் உருமாறிய வைரஸ் வகையான ஒமைக்ரான் B.F.7 சீனா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. குஜராத்தில் 3 பேருக்கும் ஒடிசாவில் ஒருவரும் உருமாறிய BF.7 கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது, "கோயம்பேடு, வணிக வளாகங்கள், கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் தாங்களாக முன்வந்து கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்’ என்றும் தெரிவித்தார்.
திரையரங்குகள், கோயில்கள் போன்ற மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் பின்பற்றி நடப்பது நல்லது. மக்கள் சூழலை அலட்சியப்படுத்தாமல் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )