Tamilnadu Corona Update: தமிழ்நாட்டில் 2,312 பேருக்கு கொரோனா பாதிப்பு; 46 பேர் உயிரிழப்பு!
சென்னையில் இன்று மட்டும் 7 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் சென்னையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தம் 8286.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 2 ஆயிரத்து 312 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,48,778 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 2,312 ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 31 ஆயிரத்து 118 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 35 ஆயிரத்து 902 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 144 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 148 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 144 ஆக உள்ளது.
கோவை 252, ஈரோடு 152, தஞ்சை 158, சேலம் 168, திருப்பூர் 138, செங்கல்பட்டு 127, கடலூர் 83, திருச்சி 84, திருவண்ணாமலை 91, நீலகிரி 58, நாமக்கல் 69, கள்ளக்குறிச்சி 70, திருவள்ளூர் 71, கன்னியாகுமரி 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் மேலும் 46 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,652 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 28 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 18 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 20 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 7 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8286 பேர் உயிரிழந்துள்ளனர்.
#TamilNadu | #COVID19 | 16 July
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 16, 2021
Today/Total - 2,312 / 25,31,118
Active Cases - 29,230
Discharged Today/Total - 2,986 / 24,68,236
Death Today/Total - 46 / 33,652
Samples Tested Today/Total - 1,48,778 / 3,52,68,724*
Test Positivity Rate (TPR) - 1.55%#TNCoronaUpdate #TN pic.twitter.com/4naF88kvEi
அதிகபட்சமாக சென்னையில் 7 பேர், கோவை, கடலூர், திருவள்ளூர், வேலூரில் தலா 4 பேர் உயிரிழந்துள்ளனர். 17 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை. தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 29,230 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,986 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,68,236 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
12 வயதிற்குட்பட்ட 124 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் குறைந்துள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 39,546 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 26,016 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 727 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஆசிரியர்கள் இனி பள்ளிக்கு வரலாம்!
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )