தேனியில் 19 பேருக்கும் , திண்டுக்கல் 15 பேருக்கும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி..!
இரு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்து வருகிறது.
திண்டுக்கல்லில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று நோயால் உயிரிழந்துள்ளார். இரு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது.
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த வாரத்தைப் பொறுத்தவரையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நோய்த்தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது. கடந்த சில தினங்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ள இன்னிலையில் இன்றும் ஒருவர் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 15 நபர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31943-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இன்று மட்டும் 21 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 31113-ஆக குறைந்துள்ளது. தற்போது வரையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 615-ஆக இருக்கிறது. இன்று 215 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் இன்று 19 நபர்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42760-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் இன்று மட்டும் 33 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 41956-ஆக குறைந்துள்ளது. தற்போது வரையில் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 509-ஆக இருக்கிறது. இன்று 295 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் தேனி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இன்று தேனி மாவட்டத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை. தேனி மற்றும் திண்டுக்கல் இரு மாவட்டங்களிலும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது.
மேலும் தெரிந்துகொள்ள படிக்கவும்,
800 வருடங்கள் பழமையான மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில்!
பார்க்க,
ஆர்ப்பரிக்கும் சுருளி Falls - கண்கொள்ளா காட்சி | Suruli falls | Flood in theni suruli water falls