மேலும் அறிய

Tamilnadu corona Update: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா; 1859 பேருக்கு பாதிப்பு!

சென்னை, கோவை, தஞ்சாவூர், கடலூர் என மாவட்ட வாரியாகவும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 859  நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,56,359 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,859 ஆக உள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட அதிகம்.

இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து  55 ஆயிரத்து 664 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 37 ஆயிரத்து 727 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 181 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 164 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 181  ஆக உயர்ந்து உள்ளது. 

கோவை 188, ஈரோடு 166, தஞ்சை 102, சேலம் 95, திருப்பூர் 78, செங்கல்பட்டு 113, கடலூர் 68, திருச்சி 70, திருவண்ணாமலை 54, திருவள்ளூர் 69, நாமக்கல் 60, கள்ளக்குறிச்சி 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 28 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,023 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 21 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 7 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இணை நோய்கள் உள்ள 21 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று மட்டும் ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னையில் மட்டும் மொத்தம் 8316 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக சேலம், கோவை, திருப்பூரில் தலா 3 பேர்  உயிரிழந்துள்ளனர். 19 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 21,207 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,145 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,00,434 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

12 வயதிற்குட்பட்ட 90 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் குறைந்துள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 39789  ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 25117ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 7654  ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. 

பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
3ம் கட்ட பட்டியலை வெளியிட்ட விஜய்.! தவெக-வின் புதிய 19 மாவட்ட நிர்வாகிகள் லிஸ்ட்
3ம் கட்ட பட்டியலை வெளியிட்ட விஜய்.! தவெக-வின் புதிய 19 மாவட்ட நிர்வாகிகள் லிஸ்ட்
Union Budget 2025 Expectations: பிப்.1- ம் தேதி தாக்கலாகிறது பட்ஜெட்  - விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?
Union Budget 2025 Expectations: பிப்.1- ம் தேதி தாக்கலாகிறது பட்ஜெட் - விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த்! நம்பர் 2 ஆகும் ஆதவ்! விஜய் போட்ட கண்டிஷன்மோதும் அண்ணாமலை நயினார்! களத்தில் இறங்கும் அமித்ஷா! பரபரக்கும் கமலாலயம்ஓரங்கட்டிய சீமான்! அப்செட்டான காளியம்மாள்! உடனே அழைத்த விஜய்Parasakthi Title Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
3ம் கட்ட பட்டியலை வெளியிட்ட விஜய்.! தவெக-வின் புதிய 19 மாவட்ட நிர்வாகிகள் லிஸ்ட்
3ம் கட்ட பட்டியலை வெளியிட்ட விஜய்.! தவெக-வின் புதிய 19 மாவட்ட நிர்வாகிகள் லிஸ்ட்
Union Budget 2025 Expectations: பிப்.1- ம் தேதி தாக்கலாகிறது பட்ஜெட்  - விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?
Union Budget 2025 Expectations: பிப்.1- ம் தேதி தாக்கலாகிறது பட்ஜெட் - விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?
Kovai Sathyan: தவெக-வில் சேருகிறேனா? இதெல்லாம் அசிங்கம்! கோபப்பட்ட கோவை சத்யன்
Kovai Sathyan: தவெக-வில் சேருகிறேனா? இதெல்லாம் அசிங்கம்! கோபப்பட்ட கோவை சத்யன்
Feb 2025 Govt Holidays: தொடங்கும் பிப்ரவரி; எந்தெந்த நாட்களில் அரசு விடுமுறை தெரியுமா?
Feb 2025 Govt Holidays: தொடங்கும் பிப்ரவரி; எந்தெந்த நாட்களில் அரசு விடுமுறை தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் கரண்ட் கட்: நாளை ( 01.02.2025) எங்கெல்லாம் தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் கரண்ட் கட்: நாளை ( 01.02.2025) எங்கெல்லாம் தெரியுமா?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு- முக்கிய விதிகள் என்ன?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு- முக்கிய விதிகள் என்ன?
Embed widget